பிளே ஆஃப் வாய்ப்பு இழந்து 4ஆவது அணியாக பரிதாபமாக வெளியேறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

By Rsiva kumar  |  First Published May 21, 2023, 11:24 AM IST

லக்னோ அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா அணி 1 ரன்னில் தோல்வி அடைந்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.


லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 68ஆவது ஐபிஎல் போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரிங்கு சிங்கைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

கொல்கத்தாவில் கோலி கோலி என்று கோஷமிட்ட ரசிகர்கள்: காம்பீர் ஸ்டைலில் பதிலடி கொடுத்த நவீன் உல் ஹக்!

Tap to resize

Latest Videos

இதில், கடைசி வரை போராடிய ரிங்கு சிங் 33 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் உள்பட 67 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். இந்தப் போட்டியில் ஒரு ரன்னில் தோல்வி அடைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து 4ஆவது அணியாக வெளியேறியது.

கடைசி வரை போராடிய ரிங்கு சிங்; 1 ரன்னில் த்ரில் வெற்றி பெற்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்!

கடைசி வரை கொல்கத்தாவின் ஹீரோவாகவே இருந்தார். ஒரு வீரர் இன்னும் சர்வதேச போட்டிகளில் கூட அறிமுகமாகாத நிலையில் ஐபிஎல் தொடரில் மட்டும் அதிரடியாக ஆடி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் இடம் பெற்றார். கொல்கத்தா மைதானம் முழுவதுமே ரிங்கு ரிங்கு என்று ரசிகர்கள் கோஷமிட்டனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக தொடர்ந்து 2ஆவது சீசனாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

WTC Final: முதுகு வலியால் அவதிப்படும் ரவிச்சந்திரன் அஸ்வின்: இங்கிலாந்து செல்லும் இந்திய அணிக்கு சிக்கல்?

குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தொடர்ந்து 3ஆவது அணியாக லக்னோ பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 4ஆவது அணி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன.

 

Rinku Singh is playing his first full IPL season, yet to make his India debut but getting the biggest cheer.

The story of IPL 2023. pic.twitter.com/g7ZgeNCIlP

— Johns. (@CricCrazyJohns)

 

click me!