கடைசி வரை போராடிய ரிங்கு சிங்; 1 ரன்னில் த்ரில் வெற்றி பெற்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்!

By Rsiva kumar  |  First Published May 21, 2023, 9:37 AM IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு 3ஆவது அணியாக தகுதி பெற்றுள்ளது.


கொல்கத்தாவில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான பிளே ஆஃப்பை தீர்மானிக்கும் போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி லக்னோ முதலில் பேட்டிங் செய்தது. இதில், நிக்கோலஸ் பூரன் மட்டும் அதிரடியாக ஆடி 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் ஓரளவு ரன்கள் சேர்க்க லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

WTC Final: முதுகு வலியால் அவதிப்படும் ரவிச்சந்திரன் அஸ்வின்: இங்கிலாந்து செல்லும் இந்திய அணிக்கு சிக்கல்?

Tap to resize

Latest Videos

பின்னர், எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஜேசன் ராய் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தனர். வெங்கடேஷ் ஐயர் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் நிதிஷ் ராணா 8 ரன்களில் வெளியேறினார். தொடக்க வீரர் ஜேசன் ராய் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 10 ரன்களில் வெளியேறினார்.

9ஆவது முறையாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறிய பஞ்சாப்!

இதையடுத்து ரிங்கு சிங் களமிறங்கினார். ஒருபுறம் ரிங்கு சிங் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்க்க மறுபுறம் விக்கெட் விழுந்து கொண்டே இருந்தது. ஆண்ட்ரே ரஸல் 7 ரன்னினும், ஷர்துல் தாக்கூர் 3 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். ஒரு கட்டத்தில் 18 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. கடைசி 2 ஓவர்களில் கேகேஆர் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ரிங்கு இருக்கிறார். எப்படியும் ஜெயிச்சிருவாரு என்று எதிர்பார்க்கப்பட்டது.

சென்னை ஜெயித்தால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு: இல்லாட்டி நடையை கட்ட வேண்டியது தான்!

ஆனால், 19ஆவது ஓவரில் 20 ரன்கள் எடுத்தார். இதில், 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்கள் அடங்கும். கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்தும் இறுதியில் ஒரு ரன்னில் கொல்கத்தா தோல்வியை தழுவியது. கடைசி வரை போராடிய ரிங்கு சிங், 33 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 67 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இதன் மூலமாக லக்னோ ஒரு ரன்னில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு 3ஆவது அணியாக தகுதி பெற்றது.  4ஆவது அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

ஒரே சீசனில் மோசமான சாதனை படைத்த வீரர்களில் முதலிடம் பிடித்த ஜோஸ் பட்லர்!

click me!