குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடுவதன் மூலமாக எம்.எஸ்.தோனி 250 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைக்கிறார்.
குஜராத்தின் கோட்டை என்று சொல்லப்படும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் 2023 ஃபைனல் நடக்கிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் விளையாடுவதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 250 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை தோனி படைக்கிறார்.
IPL 2023 Final CSK VS GT: சென்னையா? குஜராத்தா? எந்த அணி வெற்றி பெறும்?
ஏற்கனவே 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நடந்த 12 ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் 9ல் முதல் குவாலிஃபையர் போட்டியில் வெற்றி பெற்ற அணி இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது என்று ரெக்கார்ட்ஸ் சொல்கிறது.
IPL 2023 Final CSK VS GT: ஐபிஎல் 2023 ஃபைனல்: நீயானா, நானா போட்டியில் சென்னை vs குஜராத்!
ஆனால், கடந்த சீசனில் நடந்த இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி தான் வெற்றி பெற்றது. மேலும், இதற்கு முன்னதாக நடந்த குவாலிஃபையர் 2ஆவது போட்டியில் குஜராத் அணி தான் வெற்றி பெற்றது. இந்த சீசனில் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கூட குஜராத் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2023 Final CSK VS GT: மீண்டும் அதே மைதானம்: 2ஆவது முறையாக சாம்பியனாகுமா குஜராத்?
ஆனால், தோனி தனது அணியை பட்டை தீட்டி வைத்துள்ளார். ஆதலால், சென்னையில் நடந்த முதல் குவாலிஃபையர் போட்டி போன்று இன்றைய போட்டியிலும் தனது அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்று சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
MS Dhoni will become the first player in IPL history to complete 250 matches tomorrow. pic.twitter.com/XeWBH1G3WL
— Johns. (@CricCrazyJohns)
ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.20 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடி என்றும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.7 கோடியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
2011ல் இதே நாளில் பெங்களூருவை வீழ்த்தி 2ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே!