IPL 2023 Final CSK VS GT: சென்னையா? குஜராத்தா? எந்த அணி வெற்றி பெறும்?

By Rsiva kumar  |  First Published May 28, 2023, 1:50 PM IST

ஐபிஎல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள சென்னை மற்றும் குஜராத் அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


ஐபிஎல் 16ஆவது சீசன் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஃபைனல் 2023 இன்று இரவு நடக்கிறது. குஜராத்தின் கோட்டை என்று சொல்லப்படும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி நடக்கிறது.

IPL 2023 Final CSK VS GT: ஐபிஎல் 2023 ஃபைனல்: நீயானா, நானா போட்டியில் சென்னை vs குஜராத்!

Tap to resize

Latest Videos

இதுவரையில் நடந்த 14 லீக் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த முதல் குவாலிஃபையர் சுற்று போட்டியில் சிஎஸ்கே அணியிடம் தோற்று 2ஆவது குவாலிஃபையர் போட்டியில் விளையாடியது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்து இறுதிப் போட்டி முன்னேறியது.

IPL 2023 Final CSK VS GT: மீண்டும் அதே மைதானம்: 2ஆவது முறையாக சாம்பியனாகுமா குஜராத்?

இதே போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய ஐபிஎல் 14 லீக் போட்டிகளில் 8ல் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடந்த முதல் குவாலிஃபையர் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலமாக 10ஆவது முறையாக சிஎஸ்கே இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.

2011ல் இதே நாளில் பெங்களூருவை வீழ்த்தி 2ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே!

ஒரு கேப்டனாக தோனி 10ஆவது ஐபிஎல் ஃபைனலில் விளையாடுகிறார். மேலும், இது இவரோட 11ஆவது ஐபிஎல் ஃபைனல். இது ஹர்திக் பாண்டியாவின் 6ஆவது ஐபிஎல் ஃபைனல். இன்றைய போட்டியில் விளையாடுவதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 250 ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை தோனி படைப்பார்.

ஆரம்பிச்ச இடத்துக்கே வந்து நின்ன சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – First அண்ட் Final ஐபிஎல்!

கடந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய குஜராத் டைட்டன்ஸ் 2ஆவது முறையாக இன்றைய போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக இரு அணிகளும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கு முன்னதாக நடந்த 4 போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் 11:

ருத்துராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ஷிவம் துபே, அஜிங்கியா ரஹானே, அம்பத்தி ராயுடு, எம்.எஸ்.தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா

குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் 11:

விருத்திமான் சஹா (விக்கெட் கிப்பர்), சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷீத் கான், மோகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி

WTC Final: திருமணம் காரணமாக விலகிய ருத்துராஜ் கெய்க்வாட்: Standby பிளேயராக இடம் பிடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

click me!