எனக்கு ஈஸியானது நன்றி சொல்றது, கஷ்டமானது அடுத்த சீசனுக்காக 9 மாசம் கடினமாக உழைக்கனும் – தோனி!

By Rsiva kumar  |  First Published May 30, 2023, 4:38 AM IST

எனக்கு எளிதானது என்னவென்றால், நன்றி சொல்வது தான், ஆனால், கஷ்டமானது என்னவென்று கேட்டால் அது அடுத்த சீசனுக்காக நான் 9 மாதம் கடினமாக உழைக்க வேண்டும் என்று தோனி கூறியுள்ளார். 


கடந்த மார்ச் 31 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்பட்ட ஐபிஎல் 16ஆவது சீசன் இன்று மே 30 ஆம் தேதி அதிகாலையுடன் முடிவடைந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் 5 முறை சாம்பியன் பட்டத்தை சமன் செய்துள்ளது.

5 ஆவது முறையாக சென்னை சாம்பியன்: டிராபியை பெற்றுக் கொள்ள ராயுடு, ஜடேஜாவை அழைத்த தோனி!

Tap to resize

Latest Videos

அகமதாபாத்தில் சென்னை மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 214 ரன்கள் குவித்தது.

வெற்றிக்குப் பிறகு மனைவியை கட்டியணைத்த ஜடேஜா!

அதன் பிறகு சென்னை அணி பேட்டிங் ஆட வந்த போது மழை பெய்தது. இதன் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டது. எனினும் 5 ஓவர்கள் குறைக்கப்பட்டு, 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இதில், சென்னையின் வெற்றிக்கு 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சிஎஸ்கேவுக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுத்த ஜடேஜாவை அலேக்காக தூக்கிய தோனி!

அதன்படி தொடக்க வீரர்களான டெவான் கான்வே மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் இருவரும் அதிரடி காட்டினார். இதில், கான்வே 47 ரன்களும், ருத்துராஜ் கெய்க்வாட் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அஜிங்கியா ரஹானே 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராயுடுவும் 19 ரன்களில் வெளியேற, தோனி களமிறங்கினார். அவர் வந்த வேகத்தில் கோல்டன் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். கடைசியாக ஜடேஜா களமிறங்கினார். அப்போது அவருக்கு தெரியாது நாம் தான் வெற்றி தேடி தரப்போகிறோம் என்று.

கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே!

இறுதியாக கடைசி பந்தில் பவுண்டரி அடித்துக் கொடுத்து ஜடேஜா, சென்னை அணியை ஜெயிக்க வைத்துள்ளார். 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் 5ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து பேசிய சிஎஸ்கே அணியின் கேபடன் எம்.எஸ்.தோனி கூறியிருப்பதாவது: நீங்கள் பார்த்தீர்கள் என்றால், நான் ஓய்வு பெறுவதற்கு இது தான் சரியான நேரம். ஆனால், இந்த ஆண்டு நான் எங்கு சென்றாலும் என் மீது காட்டப்பட்ட அன்பும் பாராட்டுகளுக்கும் என்னால் எளிதாக சொல்ல முடிந்தது நன்றி மட்டும் தான். ஆனால், எனக்கு கடினமானது என்னவென்று கேட்டால் அடுத்த சீசனுக்காக நான் 9 மாதம் கடினமாக உழைக்க வேண்டும்.

குஜராத்தை உச்சத்திற்கு கூட்டிச் சென்ற சென்னைக்காரர்: யார் இந்த சாய் சுதர்சன்?

ஆனால், இதெல்லாம் சாத்தியமா? எல்லாமே எனது உடல்நிலையைப் பொறுத்தது தான். நான் முடிவு எடுப்பதற்கு இன்னும் 6, 7 மாதங்கள் உள்ளன. இது, தான் நான் அவர்களுக்கு கொடுக்கும் பரிசு. ரசிகர்கள் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்திய விதம் அது அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய ஒன்று என்று நினைக்கிறேன். இது எனது வாழ்க்கையின் கடைசி பகுதி என்பதால், நீங்கள் உணர்ச்சிவசப்படுவீர்கள், அது இங்கு தான் தொடங்கியது.

நான் மைதானத்திற்குள் வரும் போதே எல்லோரும் எனது பெயரைச் சொல்லி அழைக்கும் போது கண்ணில் நீர் வடியும். நான் இதைதான் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தேன். சென்னையிலும் இதே தான். சென்னையில் தான் எனது கடைசி போட்டி. ஆனால் திரும்பி வந்து என்னால் முடிந்ததை விளையாடுவது நல்லது. 

நான் என்னவாக இருக்கிறேனோ அதற்காக அவர்கள் என்னை நேசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு டிராபியும் சிறப்பு தான், ஆனால் ஐபிஎல்லின் சிறப்பு என்னவென்றால், நீங்கள் தயாராக இருக்க வேண்டியது நெருக்கடியான ஒவ்வொரு போட்டிக்கும் ஆகும். பவுலிங் எடுபடவில்லை. பேட்டிங் தான் எங்களுக்கு கை கொடுத்தது. ஒவ்வொருவரும் இக்கட்டான சூழ்நிலையை வித்தியாசமாக கையாள்கிறார்கள். அஜிங்கியா ரஹானே உள்பட இன்னும் சில அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள்.

அஜிங்க்யாவும் இன்னும் சிலரும் அனுபவம் வாய்ந்தவர்கள், எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். யாராவது குழப்பமாக இருந்தால், எப்போதும் கேட்கலாம். ராயுடுவின் சிறப்பு என்னவென்றால், அவர் தனது களத்தில் இருக்கும் போது எப்போதும் 100 சதவிகிதம் கொடுப்பார். ஆனால் அவர் அணியில் இருப்பதால், நான் ஒருபோதும் நியாயமான விருதை வெல்ல முடியாது. இந்தியா ஏ சுற்றுப்பயணத்தில் இருந்து நீண்ட காலமாக அவருடன் விளையாடி வருகிறேன்.

அவர் சுழலும் வேகமும் சமமாக விளையாடக்கூடிய வீரர். இது உண்மையிலேயே விசேஷமான ஒன்று. அவர் இன்றைக்கு மிகவும் சிறப்பான ஒன்றைச் செய்வார் என்று நான் உணர்ந்தேன், அவரும் என்னைப் போன்றவர். அடிக்கடி ஃபோனைப் பயன்படுத்துபவர் அல்ல. அவர் தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை அனுபவிப்பார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

THE GREATEST TEAM - CSK 🔥pic.twitter.com/7j44jpYPBi

— Johns. (@CricCrazyJohns)

 

click me!