வெற்றிக்குப் பிறகு மனைவியை கட்டியணைத்த ஜடேஜா!

By Rsiva kumar  |  First Published May 30, 2023, 3:14 AM IST

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றதைத் தொடர்ந்து தனது வெற்றியை மனைவி ரிவாபாவுடன் ஜடேஜா பகிர்ந்து கொண்டுள்ளார்.


சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி பேட்டிங் ஆடியது. அப்போது 3ஆவது பந்திலேயே மழை பெய்யத் தொடங்கியது. மழையின் குறுக்கீடு காரணமாக 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக இறுதிப் போட்டி அமைந்தது. இதில், சென்னையின் வெற்றிக்கு 171 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதில் டெவான் கான்வே 47 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.

சிஎஸ்கேவுக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுத்த ஜடேஜாவை அலேக்காக தூக்கிய தோனி!

Tap to resize

Latest Videos

 

Ravindra Jadeja, his wife and his daughter with the IPL trophy.

A beautiful family picture! pic.twitter.com/esApFZeE7N

— Mufaddal Vohra (@mufaddal_vohra)

 

ருத்துரஜ் கெய்க்வாட் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே 27 ரன்களிலும், ராயுடு 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த தோனி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கடைசியாக சென்னையின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து ஜடேஜா சென்னையின் வெற்றிக்கு வித்திட்டார்.

கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே!

இந்த வெற்றியின் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் 5ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இதையடுத்து இந்த வெற்றியை தனது மனைவி ரிவாபா உடன் பகிர்ந்து கொண்டார். போட்டிக்குப் பிறகு மைதானத்தில் மனைவியை கட்டியணைத்து அவருடன் தனது சந்தோஷத்தை பகிருந்து கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவீந்திர ஜடேஜாவின் கர்மா டுவீட் குறித்து அவருக்கு பக்க பலமாக இருக்கும் வகையில் உங்களது பாதையில் நீங்கள் முன்னோக்கி செல்லுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் முதல் முறையாக 3 நாட்கள் நடந்த ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி!

 

Rivaba was absolutely elated watching Jaddu's performance tonight!! Amazing couple! 🧿 pic.twitter.com/CGn3wh7va4

— Garima Lohia (@garima_lohia2)

 

click me!