தளபதி 68 படத்தில் விஜய் உடன் இணைந்து நடிக்கும் தோனி? அண்ணனா? வில்லனா?

Published : Aug 15, 2023, 01:46 PM IST
தளபதி 68 படத்தில் விஜய் உடன் இணைந்து நடிக்கும் தோனி? அண்ணனா? வில்லனா?

சுருக்கம்

விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 68 படத்தில் எம்.எஸ்.தோனி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியை வழி நடத்தி வந்த தோனி ஓய்வு பெற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கபில் தேவிற்குப் பிறகு இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பை 2007, ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2011, ஆசிய கோப்பை 2016 மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை பெற்றுக் கொடுத்தவர் எம்.எஸ்.தோனி.

MS Dhoni: தோனி ஓய்வு பெற்று 3 ஆண்டுகள் நிறைவு: ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் போட்டியில் தோனி ரன் அவுட்!

கிரிக்கெட் தவிர்த்து ஏராளமான நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். விளம்பரம், பிராண்ட் அம்பாஸிடர், விவசாயம், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றின் மூலமாக ஆண்டிற்கு ரூ.1040 கோடி வரையில் வருமானம் ஈட்டி வருகிறார். சமீபத்தில் தோனி எண்டர்டைன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக சாக்‌ஷி தோனி எல்ஜிஎம் என்ற படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படத்திற்கு தோனி இணை தயாரிப்பாளராக இருந்தார். இந்தப் படத்தில் நதியா, ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு ஆகியோரது நடித்திருந்தனர். இந்தப் படம் திரைக்கு வந்த ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

77th Independence Day: இந்திய விளையாட்டு அமைப்புகள் நாட்டு மக்களுக்கு எப்படி வாழ்த்து தெரிவித்தன?

இந்த நிலையில், தயாரிப்பாளராக தோனி அவதாரம் எடுத்ததைத் தொடர்ந்து, தற்போது சினிமாவிலும் நடிகராக கால் பதிக்க உள்ளார். ஏற்கனவே தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் வெளியாகியிருந்தது. இதையடுத்து தற்போது அவரும் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து சாக்‌ஷி தோனி கூட கூறியிருந்தார்.

தோனி நிறைய விளம்பரங்களில் நடித்திருக்கிறார். ஆகையால், அவருக்கு கேமரா ஒன்றும் புதிதாக இருக்காது. நல்ல கதையும், அவருக்கான கதாபாத்திரமும் சரியானதாக அமைந்தால் தோனி நடிப்பார். விரைவில் அதற்கான நேரம் வரும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், லியோ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 68 படத்தில் தோனி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

Virat Kohli New House: 8 ஏக்கரில் பண்ணை வீடு கட்டும் பணியை தொடங்கிய விராத் கோலி அனுஷ்கா சர்மா!

இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் மூலமாக கல்பாத்தி எஸ் அகோரம் இந்தப் படத்தை தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். வரும் 2024 ஆம் ஆண்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று ஏற்கனவே கூறப்பட்டது. இந்தப் படத்தில் தான் விஜய் உடன் இணைந்து தோனி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

50 ஓவர்கள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்ற கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் – கண்காணித்த ரிஷப் பண்ட்!

அது அண்ணன் கதாபாத்திரமா, வில்லன் கதாபாத்திரமா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக கிரிக்கெட் பிரபலங்களான ஹர்பஜன் சிங், இர்பான் பதான், ஸ்ரீ சாந்த் ஆகியோர் பலரும் சினிமாவில் நடித்துள்ளனர். இதற்கு முன்னதாக தோனி மற்றும் விஜய் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ravindra Jadeja Statue Pictures: சிலையோடு சிலையாக போஸ் கொடுத்த ரவீந்திர ஜடேஜா: வைரலாகும் புகைப்படம்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!