IPL 2023: முகமது சிராஜ் மேட்ச் வின்னிங் பவுலிங் பெர்ஃபாமன்ஸ்..! பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி

ஐபிஎல் 16வது சீசனில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 


ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று மொஹாலியில் நடந்த போட்டியில் ஆர்சிபி - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த சீசனில் வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்துவரும் ஆர்சிபி - பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 2 அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கின.

இந்த போட்டியில் ஃபாஃப் டுப்ளெசிஸ் இம்பேக்ட் பிளேயராக பேட்டிங் மட்டுமே ஆடியதால் ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷிகர் தவான் ஆடாததால் சாம் கரன் கேப்டன்சி செய்தார். டாஸ் வென்ற சாம் கரன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

Latest Videos

ஆர்சிபி அணி:

விராட் கோலி (கேப்டன்), ஃபாஃப் டுப்ளெசிஸ், மஹிபால் லோம்ரார், க்ளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, சுயாஷ் பிரபுதேசாய், ஹர்ஷல் படேல், வைன் பார்னெல், முகமது சிராஜ்.

IPL 2023: டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி

பஞ்சாப் கிங்ஸ் அணி:

அதர்வா டைட், மேத்யூ ஷார்ட், ஹர்ப்ரீத் சிங், யஸ்டிகா பாட்டியா, லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரன் (கேப்டன்), ஜித்தேஷ் ஷர்மா, ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், நேதன் எல்லிஸ், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
 
முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி இருவருமே அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 137 ரன்களை குவித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அரைசதம் அடித்த கோலி 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து சதத்தை நெருங்கிய ஃபாஃப் டுப்ளெசிஸ் 56 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 84 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அவர்கள் இருவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. மேக்ஸ்வெல்(0), தினேஷ் கார்த்திக்(7), லோம்ரார்(7) ஆகிய மூவரும் சொதப்பியதால் 20 ஓவரில் 174 ரன்கள் அடித்தது ஆர்சிபி அணி.

175 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர் அதர்வா டைட் சிராஜ் பவுலிங்கில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மேத்யூ ஷார்ட்டை 8 ரன்களுக்கு ஹசரங்கா வீழ்த்தினார். அதிரடி வீரர் லியாம் லிவிங்ஸ்டனை 2 ரன்களுக்கு சிராஜ் வீழ்த்த, ஹர்ப்ரீத் பாட்டியாவையும் சிராஜ் டேரக்ட் த்ரோவால் ரன் அவுட் செய்து அனுப்பினார். அதனால் பவர்ப்ளேயிலேயே சாம் கரன் களத்திற்கு வந்தார்.

IPL 2023: ஐபிஎல்லில் எந்த அணிக்காக ஆட ஆசை..? மனம் திறந்த கவாஸ்கர்

சாம் கரனும் 10 ரன்களுக்கு ரன் அவுட்டாக, 76 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 30 பந்தில் 46 ரன்கள் அடித்தார். அரைசதத்தை தவறவிட்டதுடன் போட்டியை முடித்து கொடுக்கவும் முடியாமல் வைன் பார்னெலின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர்  அடித்து ஆடி நம்பிக்கையளித்த ஜித்தேஷ் ஷர்மாவும் 27 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஹர்ப்ரீத் பிரார் (13), நேதன் எல்லிஸ் ஆகிய இருவரையும் சிராஜ் வீழ்த்த, 150 ரன்களுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஆல் அவுட்டானது.

24 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது. முகமது சிராஜ் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட் வீழ்த்தியதுடன் ஒரு ரன் அவுட்டும் செய்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் பாதி வீரர்களை அவர் தான் வீழ்த்தினார்.
 

click me!