IPL 2023: ஃபாஃப் - கோலி அதிரடி அரைசதம்.. சரவெடியாய் ஆரம்பித்து புஸ்வானமாய் முடிந்த RCB இன்னிங்ஸ்..!

By karthikeyan V  |  First Published Apr 20, 2023, 5:30 PM IST

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, 20 ஓவரில் 174 ரன்கள் அடித்து, 175 ரன்கள் என்ற சவாலான இலக்கை பஞ்சாப் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 


ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று மொஹாலியில் நடந்துவரும் போட்டியில் ஆர்சிபி - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த சீசனில் வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்துவரும் ஆர்சிபி - பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 2 அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கின.

இந்த போட்டியில் ஃபாஃப் டுப்ளெசிஸ் இம்பேக்ட் பிளேயராக பேட்டிங் மட்டுமே ஆடியதால் ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்படுகிறார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷிகர் தவான் ஆடாததால் சாம் கரன் கேப்டன்சி செய்கிறார். டாஸ் வென்ற சாம் கரன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

Latest Videos

ஆர்சிபி அணி:

விராட் கோலி (கேப்டன்), ஃபாஃப் டுப்ளெசிஸ், மஹிபால் லோம்ரார், க்ளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, சுயாஷ் பிரபுதேசாய், ஹர்ஷல் படேல், வைன் பார்னெல், முகமது சிராஜ்.

IPL 2023: ஐபிஎல்லில் எந்த அணிக்காக ஆட ஆசை..? மனம் திறந்த கவாஸ்கர்

பஞ்சாப் கிங்ஸ் அணி:

அதர்வா டைட், மேத்யூ ஷார்ட், ஹர்ப்ரீத் சிங், யஸ்டிகா பாட்டியா, லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரன் (கேப்டன்), ஜித்தேஷ் ஷர்மா, ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், நேதன் எல்லிஸ், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
 
முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி இருவருமே அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 137 ரன்களை குவித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அரைசதம் அடித்த கோலி 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து சதத்தை நெருங்கிய ஃபாஃப் டுப்ளெசிஸ் 56 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 84 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

IPL 2023: முதல் வெற்றியை பெறுமா DC..? அதிரடி மன்னனை களமிறக்கும் KKR..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

அவர்கள் இருவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. மேக்ஸ்வெல்(0), தினேஷ் கார்த்திக்(7), லோம்ரார்(7) ஆகிய மூவரும் சொதப்பியதால் 20 ஓவரில் 174 ரன்கள் அடித்த ஆர்சிபி அணி, 175 ரன்கள் என்ற சவாலான இலக்கை பஞ்சாப் கிங்ஸுக்கு நிர்ணயித்தது.
 

click me!