IPL 2023: ஆர்சிபி அணியை கேப்டன்சி செய்கிறார் கோலி..! ஆர்சிபி - பஞ்சாப் கிங்ஸ் மோதல்.. டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan V  |  First Published Apr 20, 2023, 3:25 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 


ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று மொஹாலியில் நடக்கும் போட்டியில் ஆர்சிபி - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்துவரும் ஆர்சிபி - பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 2 அணிகளுமே வெற்றி முனைப்பில் மோதும் போட்டி மொஹாலியில் நடக்கிறது.

இந்த போட்டியில் இரு அணிகளின் கேப்டன்களுமே ஆடவில்லை. ஆர்சிபி அணியில் ஃபாஃப் டுப்ளெசிஸ் இம்பேக்ட் பிளேயராக பேட்டிங் மட்டுமே ஆடவுள்ளதால் ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்படுகிறார்.

Tap to resize

Latest Videos

IPL 2023: முதல் வெற்றியை பெறுமா DC..? அதிரடி மன்னனை களமிறக்கும் KKR..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷிகர் தவான் ஆடாததால் சாம் கரன் கேப்டன்சி செய்கிறார். டாஸ் வென்ற சாம் கரன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் இங்கிலாந்து அதிரடி வீரர் லியாம் லிவிங்ஸ்டன் ஆடுகிறார்.

ஆர்சிபி அணி:

விராட் கோலி (கேப்டன்), ஃபாஃப் டுப்ளெசிஸ், மஹிபால் லோம்ரார், க்ளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, சுயாஷ் பிரபுதேசாய், ஹர்ஷல் படேல், வைன் பார்னெல், முகமது சிராஜ்.

ஒருநாள் உலக கோப்பையை தூக்க தரமான திட்டம்..! ஒதுக்கப்பட்ட அதிரடி வீரரை மீண்டும் களமிறக்கும் நியூசிலாந்து அணி

பஞ்சாப் கிங்ஸ் அணி:

அதர்வா டைட், மேத்யூ ஷார்ட், ஹர்ப்ரீத் சிங், யஸ்டிகா பாட்டியா, லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரன் (கேப்டன்), ஜித்தேஷ் ஷர்மா, ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், நேதன் எல்லிஸ், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
 

click me!