இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ராவிற்குப் பதிலாக முகமது ஷமி இடம் பெற உள்ளார்.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக தொடங்கி நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தான் அணி முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டியானது இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. இதில், இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
உலகக் கோப்பைக்கான இந்திய அணியை இறுதி செய்த பிசிசிஐ: நாளை அறிவிப்பு?
இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு வேளை மழையால் பாதிக்கப்பட்டு போட்டி ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படும். அப்படி வழங்கப்பட்டால், இந்தியா ஏற்கனவே ஒரு புள்ளிகளுடன் இருக்கும் நிலையில், 2 புள்ளிகள் பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். நேபாள் ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறும். மாறாக நேபாள் வெற்றி பெற்றால் இந்தியா ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறும்.
எப்போ வேண்டுமென்றாலும் குழந்தை பிறக்கலாம்; குழந்தை பிறப்பில் கலந்து கொள்ள சிட்டா பறந்து வந்த பும்ரா!
இன்று நடக்க உள்ள நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவிற்குப் பதிலாக முகமது ஷமி இடம் பெற உள்ளார். பும்ரா, தனது மனைவிக்கு முதல் குழந்தை பிறக்க உள்ள நிலையில், குழந்தை பிறப்பு நிகழ்ச்சியில் அவருடன் இருக்க வேண்டும் என்பதற்காக மும்பைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆதலால், அவருக்குப் பதிலாக முகமது ஷமி இடம் பெற உள்ளார்.
Virat Kohli Sand Art: விராட் கோலிக்காக உருவாக்கப்பட்ட மணல் சிற்பம் ஓவியம்; வைரலாகும் வீடியோ!
ஆனால், டாப் ஆர்டரில் எந்த மாற்றமும் இல்லை. ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் இன்றைய போட்டியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முகமது ஷமிக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் இடம் பெற்றிருந்தார். ஆனால், அவர் அணியில் பேட்டிங் ஆர்டரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.