சானியா மிர்சா உடனான திருமணம் குறித்து வெளியான செய்தி குறித்து முதல் முறையாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பதிலளித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியாவிற்குப் பதிலாக மாற்று வீரராக அணியில் இடம் பெற்று 11 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை கைப்பற்றினார். உலகக் கோப்பை சிறந்து விளங்கிய ஷமிக்கு மத்திய அரசு அர்ஜூனா விருது கௌரவித்தது. இந்த நிலையில் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உடனான திருமணம் குறித்து வெளியான செய்தி குறித்து ஷமி முதல் முறையாக மௌனம் கலைத்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா ஏன் கேப்டன் அல்லது துணை கேப்டனாக நியமிக்கப்படவில்லை தெரியுமா?
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் மாலிக் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் சானியா மிர்சா தனது மகன் இஷான் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார். இதே போன்று முகமது ஷமி தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தான் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வந்தது. இதுவரையில் இருவரும் இது குறித்து எந்த பதிலும் அளிக்காத நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி முதல் முறையாக பதிலளித்துள்ளார். இது தொடர்பாக ஷமி கூறியிருப்பதாவது: சமூக வலைதளங்களில் ஒவ்வொருவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை பரப்புவதை முதலில் தவிர்க்க வேண்டும்.
அதிகாரப்பூர்வமற்ற பக்கங்களில் தான் தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. முதலில் உங்களுக்கு துணிச்சல், தைரியம் இருந்தால் உங்களது அதிகாரப்பூவ பக்கத்திலிருந்து இது போன்று செய்தியை போடுங்கள் பார்க்கலாம். அப்படி நீங்கள் செய்தால் அதற்கு நான் பதில் கொடுப்பேன். மீம்ஸ் ஒவ்வொருவரும் சந்தோஷமாக இருப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், அதையே ஒருவரது வாழ்க்கையை கெடுப்பதற்கு பயன்படுத்துகிறார்கள்.
என்னுடைய மொபைலை எடுத்தாலே சானியா மிர்சாவை திருமணம் செய்து கொள்ள போவது தொடர்பான மீம்ஸ் தான் வருகிறது. தேவையற்ற விஷயங்களை சமூக வலைதளங்களில் பரப்பாதீர்கள். எப்போதும் மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். கடுமையாக உழையுங்கள், வாழ்க்கையில் முன்னேறுங்கள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.