இலங்கை செல்லும் இந்திய அணி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த கவனம் முழுவதும் பேட்டிங், பீல்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் பக்கம் திரும்பியது. பவுலிங் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் கவுதம் காம்பீர் ஆலோசகராக இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 3ஆவத் முறையாக டிராபியை வென்றது. ஆனால், அதற்கு முன்னதாக 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு ஆலோசகராக இருந்தார். அப்போது 2 முறையும் லக்னோ பிளே ஆஃப் வரை சென்றது. கவுதம் காம்பீர் கேப்டனாக இருந்த போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் டிராபியை வென்றது.
இந்த நிலையில் தான் டி20 உலகக் கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்த நிலையில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டார். இலங்கை தொடர் மூலமாக கவுதம் காம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க இருக்கிறார். இலங்கை செல்லும் இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் இலங்கை தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் கவுதம் காம்பீர் உடன் இணைந்து பயிற்சியாளர் பணியை தொடங்க இருக்கும் பேட்டிங், பீல்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் பக்கம் பிசிசிஐ கவனம் செலுத்தியுள்ளது. ஏற்கனவே இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இருந்த டி திலீப் இந்த முறையும் பீல்டிங் பயிற்சியாளராக தனது பணியை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
பேட்டிங் பயிற்சியாளராக கேகேஆர் அணியின் பேட்டிங் பயிற்சியாளரான அபிஷேக் சர்மா நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதே போன்று பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர், ஏற்கனவே ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் மகளிர் அணியை கதறவிட்ட ஷஃபாலி வர்மா – ஸ்மிருதி மந்தனா - இந்திய மகளிர் அணி எளிய வெற்றி!
புதிய தலைமை பயிற்சியாளரான காம்பீரின் தலைமையின் கீழான இந்திய அணியானது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியா தொடர், சாம்பியன்ஸ் டிராபி 2025, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2025, 5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து தொடர் 2025, 2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நியூசிலாந்து 2026 தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2027 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2027 தொடரில் விளையாடுகிறது. வரும் 2027 ஆம் ஆண்டு வரையில் அதுவும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரையில் தான் காம்பீர் பயிற்சியாளராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.