இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா ஏன் கேப்டன் மற்றும் துணை கேப்டனாக நியமிக்கப்படவில்லை என்பதற்கான காரணம் குறித்து தெரியவந்துள்ளது.
இலங்கை செல்லும் இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில், டி20 தொடருக்கான இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதே போன்று ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
undefined
ஆனால், டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன் அல்லது துணை கேப்டனாக கூட நியமிக்கப்படவில்லை. முதலில் இந்த தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா தனிப்பட்ட காரணம் தொடர்பாக விலகியதாக கூறப்பட்டது. இது குறித்து பிசிசிஐயிடம் பேசியதாக சொல்லப்பட்டது.
இதே போன்று டி20 உலகக் கோப்பை 2024 தொடரைத் தொடர்ந்து ரோகித் சர்மா, விரா கோலி மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கவுதம் காம்பீர், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இலங்கை தொடரில் விளையாட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் இருவரும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்றனர். இவர்கள் வரிசையில் கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் அணிக்கு திரும்பினர். மேலும் ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், ஹர்ஷித் ராணா, கலீல் அகமது ஆகியோரும் அணியில் இடம் பெற்றனர்.
ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. டி20 தொடரில் மட்டும் அவர் இடம் பெற்றுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். மேலும், ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மாக் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இலங்கை அணியின் டி20 தொடருக்கு முதலில் ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக நியமிக்கப்பட இருந்தார். ஆனால், அவரது குடும்ப சூழல், வேலைப்பளு மற்றும் பிட்னஸ் ஆகியவற்றின் காரணமாக அவர் கேப்டனாகவும் நியமிக்கப்படவில்லை. துணை கேப்டனாகவும் நியமிக்கப்படவில்லை. அணியில் ஒரு வீரராக மட்டுமே இடம் பெற்றுள்ளார். வரும் 27 ஆம் தேதி முதல் இலங்கை தொடர் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அபிஷேக் நாயர் பேட்டிங் பயிற்சியாளராகவும், டி திலீப் பீல்டிங் பயிற்சியாளராவும், மோர்னே மோர்கல் பவுலிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.