இந்தியாவுக்கு வரமாட்டோம்னு அடம்பிடித்த பாக்.,கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா! வெளுத்துவாங்கிய முன்னாள்வீரர்

By karthikeyan VFirst Published Dec 4, 2022, 5:17 PM IST
Highlights

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராது; பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு செல்லாது என்று கருத்து மோதலில் ஈடுபடக்கூடாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது இர்ஃபான் கூறியுள்ளார்.
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 2012ம் ஆண்டுக்கு பின் இருதரப்பு தொடர்களில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே ஆடிவருகின்றன. இந்திய அணி 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் ஆட செல்லவில்லை. 

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்த வேண்டுமென பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் விருப்பம் தெரிவித்துவந்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தது. ஆனால் பிசிசிஐ பிடி கொடுக்கவில்லை.

அடுத்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ள நிலையில், ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வதில் இந்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இந்நிலையில், இந்திய அணி ஆசிய கோப்பையில் ஆட பாகிஸ்தானுக்கு செல்லாது. பொதுவான இடத்தில் ஆசிய கோப்பை நடத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.

BAN vs IND: ஒருநாள் அணியிலிருந்து ரிஷப் பண்ட் நீக்கம்.. பிசிசிஐ அதிரடி

ஜெய் ஷாவின் இந்த கருத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், முன்னாள் வீரர்களும் கடும் அதிருப்தியடைந்தனர். இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா, ஆசிய கோப்பையில் ஆட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், ஒருநாள் உலக கோப்பையில் ஆட பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வராது என்று தெரிவித்திருந்தார்.

மேலும், ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை நாங்கள் பெற்றிருக்கிறோம். இந்திய அணி வரவில்லை என்றால் போகட்டும். அதற்காக ஆசிய கோப்பையை பாகிஸ்தானில் நடத்தாமல் பொதுவான இடத்தில் நடத்தினால், பாகிஸ்தான் கலந்துகொள்ளாது என்றார் ரமீஸ் ராஜா.

சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம்..? மைக் ஹசி கருத்து

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது இர்ஃபான், பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு செல்ல வேண்டும். இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு வரவேண்டும். அது, இருநாட்டு மக்களுக்கு இடையேயான அன்பை அதிகரிக்கும். கிரிக்கெட் அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதனால் இதுமாதிரியான அறிக்கைகளை விடுவதை தவிர்க்க வேண்டும். பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு செல்லாது என்றெல்லாம் கூறக்கூடாது. இதுகுறித்து கிரிக்கெட் வாரியம் தான் முடிவெடுக்க வேண்டும் என்றார் முகமது இர்ஃபான் கருத்து கூறியுள்ளார். 
 

click me!