கேஎல் ராகுல் அரைசதம்.. வங்கதேசத்திடம் மண்டியிட்டு சரணடைந்த இந்திய பேட்டிங்ஆர்டர்! குறைவான ஸ்கோருக்கு ஆல் அவுட்

By karthikeyan VFirst Published Dec 4, 2022, 3:00 PM IST
Highlights

வங்கதேசசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெறும் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 187 ரன்கள் என்ற எளிய இலக்கை வங்கதேசத்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று தாக்காவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், குல்தீப் சென்.

AUS vs WI: முதல் டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி.! 1-0 என தொடரில் முன்னிலை

வங்கதேச அணி:

லிட்டன் தாஸ் (கேப்டன்), அனாமுல் ஹக், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), மஹ்மதுல்லா, அஃபிஃப் ஹுசைன், மெஹிடி ஹசன், ஹசன் மஹ்மூத், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், எபாடட் ஹுசைன்.
 
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தவான் (7) மற்றும் ரோஹித் சர்மா (27) ஆகிய இருவருமே ஏமாற்றமளித்தனர். விராட் கோலி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் (24), வாஷிங்டன் சுந்தர்(19), ஷபாஸ் அகமது(0), ஷர்துல் தாகூர்(2), தீபக் சாஹர்(0) ஆகியோர் ஒருமுனையில் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த கேஎல் ராகுல் 73 ரன்களுக்கு 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்திய அணி 41.2 ஓவரில் வெறும் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம்..? மைக் ஹசி கருத்து

வங்கதேச அணி சார்பில் சீனியர் ஸ்பின்னர் ஷகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும், எபாடட் ஹுசைன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். வங்கதேச அணி 187 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டுகிறது.
 

click me!