BAN vs IND: முதல் ODI டாஸ் ரிப்போர்ட்.. தூக்கி எறியப்பட்ட ரிஷப் பண்ட்.. இந்திய அணியில் இளம் வீரர் அறிமுகம்

Published : Dec 04, 2022, 11:34 AM IST
BAN vs IND: முதல் ODI டாஸ் ரிப்போர்ட்.. தூக்கி எறியப்பட்ட ரிஷப் பண்ட்.. இந்திய அணியில் இளம் வீரர் அறிமுகம்

சுருக்கம்

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  

இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று தாக்காவில் நடக்கிறது.

நியூசிலாந்து தொடரில் ஓய்வில் இருந்த கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகிய மூவரும் வங்கதேச தொடரில் ஆடுகின்றனர். முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரலைனா போய்ட்டு போகுது.. அதுக்கு என்ன பண்றது? ஆசிய கோப்பை குறித்து ரமீஸ் ராஜா தடாலடி

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித்தும் தவானும் களமிறங்குகின்றனர். கோலி 3ம் வரிசையிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 4ம் வரிசையிலும் ஆடுகின்றனர். கேஎல் ராகுல் 5ம் வரிசையில் ஆடுகிறார். அணியின் பேலன்ஸை வலுப்படுத்த வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் என அதிகமான ஆல்ரவுண்டர்களை அணியில் எடுத்ததால் ரிஷப் பண்ட்டை உட்காரவைக்கப்பட்டார். அதனால் கேஎல் ராகுலே விக்கெட் கீப்பிங் செய்கிறார்.

ஸ்பின்னர்களாக பேட்டிங்  ஆடத்தெரிந்த ஆல்ரவுண்டர்கள் சுந்தர் மற்றும் ஷபாஸ் அகமது ஆடுகின்றனர். ஃபாஸ்ட் பவுலர்களாக ஆல்ரவுண்டர்கள் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் ஆகியோருடன் முகமது சிராஜ் மற்றும் குல்தீப் சென் ஆகியோரும் ஆடுகின்றனர். இளம் ஃபாஸ்ட் பவுலர் குல்தீப் சென் இந்த போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார்.

ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பிவரும் நிலையில், அவருக்கு வாய்ப்பளித்து ஒரு இடத்தை வீணடிப்பதற்கு, ராகுலை விக்கெட் கீப்பிங் செய்யவைத்தால் கூடுதலாக ஒரு ஆல்ரவுண்டரை சேர்க்கலாம் என்பதால் ரிஷப் பண்ட் உட்காரவைக்கப்பட்டார்.

BAN vs IND: ரிஷப் பண்ட்டுக்கு இதுவே கடைசி சான்ஸ்..! சொதப்பினால் இந்திய அணியில் இடம் காலி

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், குல்தீப் சென்.

வங்கதேச அணி:

லிட்டன் தாஸ் (கேப்டன்), அனாமுல் ஹக், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), மஹ்மதுல்லா, அஃபிஃப் ஹுசைன், மெஹிடி ஹசன், ஹசன் மஹ்மூத், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், எபாடட் ஹுசைன்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரஜினியின் வெறித்தனமான ரசிகர்! விஜய் ஸ்டைலில் கொண்டாட்டம்! வெங்கடேஷ் ஐயர் சொன்னது என்ன தெரியுமா?
IPL 2026 Points Table: 2 இடங்களுக்கு 5 அணிகள் போட்டி! டாப் கியரில் ஆர்சிபி.. தத்தளிக்கும் சிஎஸ்கே!