PAK vs ENG: சர்வதேச டெஸ்ட் போட்டிக்கு லாயக்கில்லாத மட்டமான ராவல்பிண்டி பிட்ச்சில் 3 பாகிஸ்தான் வீரர்கள் சதம்

By karthikeyan VFirst Published Dec 3, 2022, 9:56 PM IST
Highlights

பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 657 ரன்களை குவித்த நிலையில், பாகிஸ்தான் அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்களை குவித்துள்ளது.
 

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. ராவல்பிண்டியில் முதல் டெஸ்ட் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணி:

ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட், ஆலி போப் (விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், வில் ஜாக்ஸ், ஜாக் லீச், ஆலி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம்..? மைக் ஹசி கருத்து

பாகிஸ்தான் அணி:

அப்துல்லா ஷாஃபிக், இமாம் உல் ஹக், அசார் அலி, பாபர் அசாம் (கேப்டன்), சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப், முகமது அலி, ஜாஹித் மஹ்மூத்.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியில் ஜாக் க்ராவ்லி (122), பென் டக்கெட் (107), ஆலி போப்(108) மற்றும் ஹாரி ப்ரூக் (153) ஆகிய 4 வீரர்கள் அடித்த அபாரமான சதங்களால் முதல் இன்னிங்ஸில் 657 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி. முதல் நாள் ஆட்டத்தில் 506 ரன்களை குவித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாளில் அதிக ரன்களை குவித்த அணி என்ற வரலாற்று சாதனையை இங்கிலாந்து அணி படைத்தது.

ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா மாதிரியான உலகத்தரம் வாய்ந்த மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்கள் பாகிஸ்தான் அணியில் இருந்தும் இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்டிங்கை கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கு காரணம், ராவல்பிண்டி பிட்ச்சின் தன்மைதான். பவுலர்களுக்கு கொஞ்சம் கூட ஒத்துழைப்பே இல்லாத மட்டமான பிட்ச். பிட்ச்சில் எதுவுமே இல்லை.

மொக்கை பிட்ச்சில் இங்கிலாந்து வீரர்கள் தான் அடிப்பார்களா என்ன..? பாகிஸ்தான் வீரர்களும் தாங்கள் கற்றுக்கொண்ட மொத்த வித்தைகளையும் சொத்தை பிட்ச்சில் இறக்கிவிட்டனர். தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷாஃபிக் (114) மற்றும் இமாம் உல் ஹக் (121) ஆகிய இருவருமே சதமடித்தனர். கேப்டன் பாபர் அசாமும் சதமடித்தார். பாபர் அசாம் 136 ரன்களை குவித்தார். 3ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்களை குவித்துள்ளது.

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரலைனா போய்ட்டு போகுது.. அதுக்கு என்ன பண்றது? ஆசிய கோப்பை குறித்து ரமீஸ் ராஜா தடாலடி

டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக கோப்பை நடத்தப்பட்டுவரும் இந்த காலக்கட்டத்தில் ஆடுகளத்திற்கு தர நிர்ணயம் செய்யவேண்டும். டெஸ்ட் போட்டிகளுக்கு முடிவு எட்டப்படும் இந்த காலத்தில் இதுமாதிரியான பிட்ச்களை அனுமதிக்கவே கூடாது.
 

click me!