இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரலைனா போய்ட்டு போகுது.. அதுக்கு என்ன பண்றது? ஆசிய கோப்பை குறித்து ரமீஸ் ராஜா தடாலடி

By karthikeyan V  |  First Published Dec 3, 2022, 7:34 PM IST

2023ல் பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கோப்பையில் ஆடுவதற்கு இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், அது இந்திய அணியின் முடிவு. அதற்காக ஆசிய கோப்பையை பாகிஸ்தானில் நடத்தாமல் இடம் மாற்றினால் பாகிஸ்தான் ஆசிய கோப்பையில் கலந்துகொள்ளாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 


இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 2012ம் ஆண்டுக்கு பின் இருதரப்பு தொடர்களில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே ஆடிவருகின்றன. இந்திய அணி 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் ஆட செல்லவில்லை. 

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்த வேண்டுமென பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் விருப்பம் தெரிவித்துவந்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தது. ஆனால் பிசிசிஐ பிடி கொடுக்கவில்லை.

Tap to resize

Latest Videos

மருத்துவமனையில் இருந்து மீண்டும் வர்ணனைக்கு திரும்பினார் ரிக்கி பாண்டிங்..!

அடுத்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ள நிலையில், ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வதில் இந்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இந்நிலையில், இந்திய அணி ஆசிய கோப்பையில் ஆட பாகிஸ்தானுக்கு செல்லாது. பொதுவான இடத்தில் ஆசிய கோப்பை நடத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.

ஜெய் ஷாவின் இந்த கருத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், முன்னாள் வீரர்களும் கடும் அதிருப்தியடைந்தனர். இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா, ஆசிய கோப்பையில் ஆட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், ஒருநாள் உலக கோப்பையில் ஆட பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வராது என்று தெரிவித்திருந்தார்.

BAN vs IND: காயத்தால் விலகிய ஷமி.. முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

இந்நிலையில், பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிக்கு இடையே இதுகுறித்து பேசிய ரமீஸ் ராஜா, ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை நாங்கள் பெற்றிருக்கிறோம். இந்திய அணி வரவில்லை என்றால் போகட்டும். அதற்காக ஆசிய கோப்பையை பாகிஸ்தானில் நடத்தாமல் பொதுவான இடத்தில் நடத்தினால், பாகிஸ்தான் கலந்துகொள்ளாது.  நாங்கள் பெரிய அணிகளை எல்லாம் வரவழைத்து கிரிக்கெட் தொடர்களை நடத்துகிறோம். இந்திய அணி இருதரப்பு தொடரில் ஆட பாகிஸ்தானுக்கு வரவில்லை என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்திய அரசு அனுமதிக்காததால் அவர்கள் வருவதில்லை. ஆனால் ஆசிய கோப்பை, உலக கோப்பை ஆகியவை ஐசிசி நடத்தும் தொடர்கள்.  இந்திய அணி பாகிஸ்தானுக்கு வருவதும் வராததும் அவர்களது விருப்பம். ஆனால் அதற்காக ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தானிடமிருந்து பறிக்கக்கூடாது என்றார் ரமீஸ் ராஜா.
 

click me!