மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் இதுவரையில் 15 போட்டிகளில் 544 ரன்கள் குவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது குவாலிஃபையர் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடக்கிறது. குஜராத்தை அதனுடைய சொந்த மைதானத்தில் வீழ்த்துவது என்பது கடினம். இதுவரையில் அகமதாபாத் மைதானத்தில் நடந்த 7 போட்டிகளில் 4ல் குஜராத் வெற்றி பெற்றுள்ளது.
சேப்பாக்கதை விட இரவில் ஜொலிக்கும் நரேந்திர மோடி மைதானம் – வைரலாகும் வீடியோ!
இதுவரையில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதிய 3 போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி வாகை சூடியுள்ளது. இதுவரையில் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த 25 போட்டிகளில் முதலில் பேட்டிங் ஆடிய அணி 12 முறையும், சேஸிங் செய்த அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
Qualifier 2: 5 டைம்ஸ் சாம்பியனா? 1 டைம் சாம்பியனா? GT vs MI ரெக்கார்ட்ஸ் என்ன சொல்லுது?
இதில் அதிகபட்சமாக 227 ரன்களும், குறைந்தபட்சமாக 102 ரன்களும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் விளையாடிய 8 போட்டிகளில் குஜராத் அணி 5ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்துள்ளது. குஜராத் அதிகபட்சமாக 227 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக 125 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
WTC இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகை அறிவிப்பு: முதல் பரிசு ரூ.13.2 கோடி, 2ஆம் பரிசு ரூ.6.5 கோடி!
இந்த மைதானத்தில் விளையாடிய 3 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் ஒரு போட்டியில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. அதிகபட்சமாக 178 ரன்களும், குறைந்தபட்சமாக 152 ரன்களும் எடுத்துள்ளது. முதலில் ஆடிய மும்பை தான் ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் மிக முக்கியமானவர் சூர்யகுமார் யாதவ். இந்த சீசனில் 15 போட்டிகளில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 544 ரன்கள் குவித்துள்ளார். மும்பை அணியின் சொந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவித்து வந்த சூர்யகுமார் யாதவ் வெளி மைதானங்களில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.
MIயை பார்த்தால் பயமா இருக்கு; மும்பை மட்டும் இறுதிப் போட்டிக்கு வரக் கூடாது: டுவைன் பிராவோ!
இதுவரையில் 8 போட்டிகளில் வெளி மைதானங்களில் நடந்த போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் 177 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால், வான்கடே மைதானத்தில் நடந்த 7 போட்டிகளில் அவர் 367 ரன்கள் குவித்துள்ளார். இதன் காரணமாக இன்று அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் போட்டியில் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.