ஐபிஎல் 16வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டியை அனலிஸ் செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறியது.
எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸும், முதல் தகுதிப்போட்டியில் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸும் 2வது தகுதிப்போட்டியில் மோதுகின்றன. இன்று அகமதாபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 28ம் தேதி நடக்கும் ஃபைனலில் சிஎஸ்கேவை எதிர்கொள்ளும்.
IPL 2023: பெரிய மேட்ச்சை ஜெயிக்கும் வித்தை அறிந்தவர் தோனி..! கங்குலி புகழாரம்
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸும் 2வது தகுதிப்போட்டியில் மோதுகின்றன. இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும். இந்நிலையில், இந்த போட்டி குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியிருக்கிறார்.
IPL 2023: ரிக்கி பாண்டிங்கின் அடத்தால் அழிந்த டெல்லி கேபிடள்ஸ்..! செம காட்டு காட்டிய கவாஸ்கர்
இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, குஜராத் டைட்டன்ஸ் அணியும் மிகச்சிறந்த அணி. எனவே அதை வீழ்த்துவது மும்பை இந்தியன்ஸுக்கு எளிதாக இருக்காது. இந்த சீசன் முழுவதும் முதலிடத்தில் இருந்த அணி குஜராத். எனவே குஜராத் அணியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த போட்டி மிக அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் 50-50 வாய்ப்புள்ளது. ஒரு நல்ல போட்டியை பார்க்கவிருக்கிறோம். முகமது ஷமியை மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.