குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 2ஆவது குவாலிஃபையர் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.
ஐபிஎல் திருவிழா இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில், முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
WTC இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகை அறிவிப்பு: முதல் பரிசு ரூ.13.2 கோடி, 2ஆம் பரிசு ரூ.6.5 கோடி!
இதைத் தொடர்ந்து நடந்த எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் குவாலிஃபையர் 2 சுற்றுக்கு தகுதி பெற்றன.
MIயை பார்த்தால் பயமா இருக்கு; மும்பை மட்டும் இறுதிப் போட்டிக்கு வரக் கூடாது: டுவைன் பிராவோ!
குஜராத் அணியின் கோட்டையான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு குவாலிஃபையர் 2ஆவது போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி வரும் 28 ஆம் தேதி இதே மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் மோதும். இதுவரையில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதிய 3 போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி வாகை சூடியுள்ளது.
கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் 2ஆவது குவாலிஃபையர்: மும்பை, குஜராத் பலப்பரீட்சை!
இதுவரையில் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த 25 போட்டிகளில் முதலில் பேட்டிங் ஆடிய அணி 12 முறையும், சேஸிங் செய்த அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதில் அதிகபட்சமாக 227 ரன்களும், குறைந்தபட்சமாக 102 ரன்களும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் விளையாடிய 8 போட்டிகளில் குஜராத் அணி 5ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்துள்ளது. குஜராத் அதிகபட்சமாக 227 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக 125 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
பத்திரனாவை என்ன மாதிரி ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணா, அவர் இந்திய அணியில் விளையாடுவாரா?
இந்த மைதானத்தில் விளையாடிய 3 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் ஒரு போட்டியில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. அதிகபட்சமாக 178 ரன்களும், குறைந்தபட்சமாக 152 ரன்களும் எடுத்துள்ளது. முதலில் ஆடிய மும்பை தான் ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.