BAN vs AFG: இடி மாதிரி விழுந்த அடி, வாரி கொடுத்த ஆப்கானிஸ்தான் வீரர்கள்; வங்கதேசம் 334 ரன்கள் குவிப்பு!

By Rsiva kumar  |  First Published Sep 3, 2023, 8:14 PM IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியில் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் இருவரும் சதம் அடிக்கவே வங்கதேசம் 334 ரன்கள் குவித்துள்ளது.


ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 4ஆவது லீக் போட்டியானது தற்போது லாகூரில் நடந்து வருகிறது. இதில், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழந்து 334 ரன்கள் குவித்தது.

India vs Pakistan: கடைசி வாய்ப்பு, இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இரவு 8 மணிக்கு தொடக்கம்!

Tap to resize

Latest Videos

வங்கதேசம்

முகமது நைம், நஜ்முல் ஹூசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிரிடோய், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), ஷமீம் ஹூசைன், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), அஃபிப் ஹூசைன், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத்,

ஆப்கானிஸ்தான்:

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரன், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (கேப்டன்), நஜிபுல்லா ஜத்ரன், முகமது நபி, குல்பதின் நைப், கரீம் ஜனத், ரஷீத் கான், ஃபசல்ஹக் பாரூக்கி, முஜீப் உர் ரஹ்மான்

ஜிம்பாப்வே கிரிக்கெட் ஜாம்பவான் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்!

இதில், தொடக்க வீரரான முகமது நைம் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தவ்ஹித் ஹிரிடோய் டக் அவுட்டில் வெளியேறினார். இதையடுத்து நஜ்முல் ஹூசைன் சாண்டோ மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் இருவரும் இணைந்து ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களை கதி கலங்கச் செய்தனர். மெஹிடி ஹசன் மிராஸ் அதிரடியாக விளையாடி 119 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உள்பட 112 ரன்கள் எடுத்து ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். 17 மாதங்களில் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் வங்கதேச தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமையை மெஹிதி ஹசன் மிராஸ் பெற்றார்.

Men’s Asian Hockey 5s World Cup qualifier: ஆசிய ஆண்கள் 5 பேர் ஹாக்கி – இந்தியா சாம்பியன்!

ஷாண்டோ அதிரடியாக விளையாடி 105 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உள்பட 104 ரன்கள் குவித்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். தானாக ஓடி வந்து வழுக்க் விழுந்து ரன் அவுட்டானார். அதன் பிறகு வந்த முஷ்பிகுர் ரஹீம் 25 ரன்களில் ஆட்டமிழக்க, ஷமீம் ஹூசைன் 11 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். இறுதியாக ஷாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுக்க வங்கதேச அணியானது 334 ரன்கள் குவித்தது.

India vs Nepal: இந்தியா – நேபாள் போட்டிக்கும் சிக்கல்; மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு!

பந்து வீச்சு தரப்பில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஜீப் உர் ரஹ்மான் மற்றும் குல்பதின் நைப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து கடின இலக்கை துரத்தி தற்போது ஆப்கானிஸ்தான் விளையாடி வருகிறது. தற்போது வரையில் ஆப்கானிஸ்தான் அணியானது 9 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

click me!