
இந்தியா நடத்தும் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதற்கான இந்திய அணி இன்னும் ஒரிரு நாட்களில் அறிவிக்கப்பட இருக்கின்றனர். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம், நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் இடம் பெற்று விளையாட உள்ளன. சென்னை, புனே, தர்மசாலா, லக்னோ என்று 10 மைதானங்களில் இந்தப் போட்டி நடக்கிறது.
India vs Nepal: இந்தியா – நேபாள் போட்டிக்கும் சிக்கல்; மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு!
ஏற்கனவே சென்னை, புனே, தர்மசாலா, மும்பை, லக்னோ, டெல்லி, கொல்கத்தா மற்றும் பெங்களூரு ஆகிய மைதானங்களில் நடைபெறும் இந்திய அணியின் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் அகமதாபாத் போட்டிக்கான டிக்கெட் விற்பனையானது இன்று 8 மணிக்கு தொடங்குகிறது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் ஜாம்பவான் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்!
இன்றைய விற்பனையானது IND vs PAK உலகக் கோப்பை 2023 டிக்கெட்டுகளைப் பெற ரசிகர்களுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் BookMyShow மற்றும் tickets.cricketworldcup.com இல் டிக்கெட்டுகளைப் பெறலாம். ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது நடந்ததைப் போன்ற அவசரத்தை பிசிசிஐ விரும்பவில்லை என்பதால் இந்த முறை மின் டிக்கெட்டுகள் எதுவும் இருக்காது. ரசிகர்கள் தங்களின் டிக்கெட்டுகளைப் பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன: கூரியர் மூலமாகவோ அல்லது உள்ளூர் ஸ்டேடியத்தின் பாக்ஸ் ஆபிஸ் கவுண்டர்களில் நேரிலோ பெற்றுக் கொள்ளலாம்.
Men’s Asian Hockey 5s World Cup qualifier: ஆசிய ஆண்கள் 5 பேர் ஹாக்கி – இந்தியா சாம்பியன்!
செப்டம்பர் 14 அன்று மாலை 6 மணி முதல் - அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்.
செப்டம்பர் 15, வெள்ளிக்கிழமை, இரவு 8 மணிக்கு, ICC ஆண்கள் உலகக் கோப்பை 2023 போட்டிகளுக்கான பொது டிக்கெட் விற்பனை தொடங்கும்.
Asia Cup 2023: 3 மாற்றங்களுடன் களமிறங்கிய வங்கதேசம்; டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!