சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 24ஆவது போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் ஆடியது. இதில், தொடக்க வீரர் சுஜய் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான விக்கெட் கீப்பர் அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 64 ரன்கள் குவித்தார்.
ஆட்டம் காட்டிய சுரேஷ் குமார், ஷாருக்கான்: லைகா கோவை கிங்ஸ் 208 ரன்கள் குவிப்பு!
இதையடுத்து வந்த சச்சின் மற்றும் கேப்டன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர். இதில், சச்சின் 51 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ஷாருக்கான் 23 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 53 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியாக லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.
உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற இலங்கை; நவம்பர் 2ல் இந்தியா – இலங்கை பலப்பரீட்சை!
பந்து வீச்சு தரப்பில் குர்ஜாப்னீத் சிங் மற்றும் ஸ்வப்னில் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அதன் பின்னர் கடின இலக்கை துரத்திய சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு தொடக்க வீரர் விக்கெட் கீப்பரான சுரேஷ் லோகேஷ்வர் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உடன் பலப்பரீட்சை: ஜெயிச்சா இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம்!
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 7 போட்டிகளில் விளையாடி 6 போட்டியில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதே போன்று திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. நெல்லை ராயல் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி கண்டு மூன்றாவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுள்ளது. இந்தப் போட்டியில் தோற்றதன் மூலமாக சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது.
இந்த ரேஸில் சேப்பாக்கம், திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு என்ஜாய்மெண்ட் தான் – இந்தியா ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் கன்ஃபார்ம்!