ஆட்டம் காட்டிய சுரேஷ் குமார், ஷாருக்கான்: லைகா கோவை கிங்ஸ் 208 ரன்கள் குவிப்பு!

By Rsiva kumar  |  First Published Jul 2, 2023, 5:58 PM IST

சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி 208 ரன்கள் குவித்துள்ளது.


தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 24ஆவது போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் ஆடியது. இதில், தொடக்க வீரர் சுஜய் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான விக்கெட் கீப்பர் அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 64 ரன்கள் குவித்தார்.

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உடன் பலப்பரீட்சை: ஜெயிச்சா இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம்!

Tap to resize

Latest Videos

இதையடுத்து வந்த சச்சின் மற்றும் கேப்டன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர். இதில், சச்சின் 51 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ஷாருக்கான் 23 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 53 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியாக லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு என்ஜாய்மெண்ட் தான் – இந்தியா ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் கன்ஃபார்ம்!

பந்து வீச்சு தரப்பில் குர்ஜாப்னீத் சிங் மற்றும் ஸ்வப்னில் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதுவரையில் விளையாடிய 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று லைகா கோவை கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது. இதே போன்று திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. நெல்லை ராயல் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி கண்டு மூன்றாவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும். இல்லையென்றால், சேப்பாக்கம், திருப்பூர் மற்றும் சேலம் அணிகளின் போட்டிகளைப் பொறுத்து 4ஆவது அணி தீர்மானிக்கப்படும்.

நா ரெடி பாடலுக்கு... அச்சு அசல் நடிகர் விஜய்யை போல் மாஸ் ஆக நடனமாடி அசத்திய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்

 

4446! Shahrukh wins the battle against Murugan Ashwin pic.twitter.com/bLLfMdAKem

— FanCode (@FanCode)

 

click me!