
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸிடம் தோற்ற சிஎஸ்கே அணி இன்றைய போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான வலுவான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
சென்னை சேப்பாக்கத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுதான் ஐபிஎல் போட்டி நடக்கிறது. எனவே இந்த போட்டியில் சொந்த மண்ணில் வெற்றியை பெறும் முனைப்பில் சிஎஸ்கே அணி களமிறங்கியுள்ளது. லக்னோ அணியும் முதல் போட்டியில் டெல்லி கேபிடள்ஸை வீழ்த்திய் அதே உத்வேகத்துடனும் நம்பிக்கையுடனும் சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது.
IPL 2023: சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் இவர் தான்..! அடித்துச்சொல்லும் சேவாக்
சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கான சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஜெய்தேவ் உனாத்கத் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் ஃபாஸ்ட் பவுலர் யஷ் தாகூர் ஐபிஎல்லில் அறிமுகமாகிறார்.
சிஎஸ்கே அணி:
டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, பிரசாந்த் சோலங்கி, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மிட்செல் சாண்ட்னெர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கேஎல் ராகுல், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம், மார்க் உட், யஷ் தாகூர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.