IPL 2023: மன வேதனையுடன் காயத்தோடு நாடு திரும்பிய கேன் வில்லியம்சன் - குஜராத் டைட்டன்ஸ் பதிவிட்ட வீடியோ!

By Rsiva kumar  |  First Published Apr 3, 2023, 6:16 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியின் போது குஜராத் டைட்டன்ஸ் வீரர் கேன் வில்லியம்சன் காயமடைந்த நிலையில், தற்போது தொடரிலிருந்து விலகி நாடு திரும்பியுள்ளார்.
 


ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில்  7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதில், ருத்துராஜ் கெய்க்வாட் மட்டும் அதிரடியாக ஆடி 92 ரன்கள் சேர்த்தார். போட்டியின் 12.3 ஆவது ஓவரை ஜோஷுவா லிட்டில் வீசினார். எதிர்முனையில் கெய்க்வாட் பேட்டிங் செய்தார். 

IPL 2023: ரோகித்துக்கு ஓபனிங்கலாம் செட்டே ஆகாது, மிடில் ஆர்டர் தான் - அனில் கும்ப்ளே அட்வைஸ்!

Tap to resize

Latest Videos

அப்போது அவர் பந்தை சிக்சருக்கு விளாச பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த வில்லியம்சன் தாவி பந்தை கேட்ச் பிடிக்க முயற்சி செய்து வலது காலை அழுத்தமாக ஊன்றிய நிலையில், கீழே விழுந்தார். இதில், அவரது வலது காலின் முழங்கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. சிக்ஸர் தடுக்கப்பட்ட போதிலும், பந்து பவுண்டரி லைனை தொடவே, பவுண்டரி கொடுக்கப்பட்டது. வலியால் துடித்த கேன் வில்லியம்சனை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதன் பிறகு அவர் பேட்டிங் ஆட வரவேயில்லை. வீரர்கள் அமர்ந்திருக்கும் சீட்டில் அமர்ந்தி வேடிக்கை பார்த்தார். 

IPL 2023: ஒரே மேட்ச் தான், யாருன்னு காட்டிய லக்னோ; பதிலடி கொடுக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்ற கேன் வில்லியம்சனுக்கு இந்த தொடர் ஏமாற்றமாக அமைந்துவிட்டது. இந்த நிலையில், நாடு திரும்பிய கேன் வில்லியம்சன் பேசிய வீடியோவை குஜராத் டைட்டன்ஸ் அணி டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

IPL 2023: கவுதம், மார்க் வுட், கைல் மேயர்ஸ் வைத்து திட்டம் போடும் லக்னோ; சேப்பாக்கத்தில் ஆக்‌ஷன் காட்சி தான்

அதில், அவர் கூறியிருப்பதாவது: “குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எஞ்சிய சீசனுக்கு வாழ்த்துகள். நான் உங்கள் அனைவருடனும் இருந்திருக்க விரும்புகிறேன், ஆனால் இருக்கக்கூடாது. மேலும் ரசிகர்களின் அன்பான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், விரைவில் குணமடைய காத்திருக்கிறேன், நன்றி" என்று பேசியுள்ளார். கேன் வில்லியம்சனின் இன்ஸ்டாகிராம் பதிவிற்கு, டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் நலமடையுங்கள் தம்பி என்று ரிப்ளே கொடுத்துள்ளார். 

முதல் போட்டியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வரும் 4 ஆம் தேதி நாளை டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் அடுத்த போட்டி நடக்க இருக்கிறது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kane Williamson (@kane_s_w)

 

click me!