ஐபிஎல் 16வது சீசனில் இன்று நடக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - டெல்லி கேபிடள்ஸ் இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் 4 முறை சாம்பியன் சிஎஸ்கேவும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸும் மோதின. இந்த போட்டியில் சிஎஸ்கே நிர்ணயித்த 179 ரன்கள் என்ற இலக்கை அடித்து குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியது.
இன்று சனிக்கிழமை என்பதால் 2 போட்டிகள் நடக்கின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடக்கும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் மோதுகின்றன.
IPL 2023: காயத்தால் ஐபிஎல்லில் இருந்து கேன் வில்லியம்சன் விலகல்..! குஜராத் டைட்டன்ஸுக்கு பின்னடைவு
இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடக்கும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கேஎல் ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணல் பாண்டியா, ஜெய்தேவ் உனாத்கத், மார்க் உட், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்.
உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:
டேவிட் வார்னர் (கேப்டன்), பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரைலீ ரூசோ, சர்ஃபராஸ் கான் (விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், அக்ஸர் படேல், கமலேஷ் நாகர்கோட்டி, குல்தீப் யாதவ், சேத்தன் சக்காரியா, கலீல் அகமது.