IPL 2023 CSK: ஐபிஎல்லில் புதிய அத்தியாயம் படைத்த தோனி: சிஎஸ்கேவுக்கு 200ஆவது சிக்ஸ் அடித்து கொடுத்த தல!

By Rsiva kumar  |  First Published Apr 1, 2023, 1:41 PM IST

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்ததன் மூலமாக எம் எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 200 சிக்ஸர்கள் அடித்துக் கொடுத்துள்ளார். 
 


ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான கிரிக்கெட் திருவிழா நேற்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இதில், புகழ்பெற்ற இந்திய பாடகர் அரிஜித் சிங், தமன்னா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரது கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. இதையடுத்து 2023 ஆம் ஆண்டுக்கான 16ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டி தொடங்கப்பட்டது. இதில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சு தேர்வு செய்தார்.

IPL 2023 KKR: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 20 போட்டிகளில் வெற்றி கண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

Tap to resize

Latest Videos

அதன்படி முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்தது. எப்படியும் 200 ரன்களுக்கு மேல் அடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீச, அடுத்த 10 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 92 ரன்கள் சேர்த்து 8 ரன்களில் சதத்தை கோட்டைவிட்டார்.

IPL 2023 CSK: சிஎஸ்கே தோல்விக்கு ஷிவம் துபே தான் காரணமா? இவரெல்லாம் எதுக்கு எடுத்தாங்க?

பின்னர், ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஆவது ஓவரில் 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக அகமதாபாத் மைதானத்தில் நேருக்கு நேர் மோதிய முதல் போட்டியிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த சீசனில் நடந்த 2 போட்டிகளிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி தான் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனைகள்:


1. ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் அறிமுகம் - இளம் வயதில் அறிமுகமான வீரர் (20 வயது, 141 நாட்கள்)

2. ஐபிஎல் 2023ல் முதல் ரன்னை ருதுராஜ் கெய்க்வாட் எடுத்தார்.

3. ஐபிஎல் 2023ன் 16ஆவது சீசனின் முதல் பவுண்டரியை ருதுராஜ் கெய்க்வாட் அடித்தார்.

4. ஐபிஎல் 2023ன் 16ஆவது சீசனின் முதல் சிக்ஸரை ருதுராஜ் கெய்க்வாட் அடித்தார்.

5. சென்னை அணியில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட் இடம் பிடித்தார்.
அவர், நேற்றைய போட்டியில் மட்டும் 9 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முரளி விஜய் (11), ராபின் உத்தப்பா (9), பிரெண்டன் மெக்கல்லம் (9), மைக்கேல் ஹஸ்ஸி (9) ஆகியோர் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.

IPL 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் படைத்த சாதனைகள், 3ஆவது முறையாக தோல்வி - ஒரு பார்வை!

6. தொடக்க வீரராக அதிக ரன்கள் குவித்தவர் ருதுராஜ் கெய்க்வாட் 92 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்னதாக, பிரெண்டன் மெக்கல்லம் 158 ரன்கள் (நாட் அவுட்), ரோகித் சர்மா 98 ரன்கள் எடுத்துள்ளனர்.

7. ஒரே அணியில் அதிக சிக்சர்கள் அடித்தவர்களின் பட்டியலில் தோனி இடம் பிடித்துள்ளார். நேற்றைய போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்ததன் மூலமாக 200 சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் தோனி இடம் பிடித்துள்ளார்.

  • கிறிஸ் கெயில் - 239 சிக்ஸர்கள் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
  • ஏபி டிவிலியர்ஸ் - 238 சிக்ஸர்கள் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
  • கெரான் போலார்டு - 223 சிக்ஸர்கள் (மும்பை இந்தியன்ஸ்)
  • விராட் கோலி - 218 சிக்ஸர்கள் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
  • எம் எஸ் தோனி - 200 சிக்ஸர்கள் (சென்னை சூப்பர் கிங்ஸ்

IPL 2023: சிக்ஸரை தடுக்க சென்று காலை உடைத்துக் கொண்ட கேன் வில்லியம்சன்!

click me!