IPL 2023: அடுத்தடுத்து விலகும் வீரர்கள்.. ஆடிப்போன கேகேஆர்..!

By karthikeyan VFirst Published Mar 23, 2023, 5:13 PM IST
Highlights

ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல்லில் இருந்து விலகும் நிலையில், நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் லாக்கி ஃபெர்குசனும் ஐபிஎல்லில் ஆடுவது சந்தேகமானதால் கேகேஆர் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
 

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே ஆகிய இருபெரும் சாம்பியன் அணிகளுக்கு அடுத்த வெற்றிகரமான அணி கேகேஆர் தான்.

கௌதம் கம்பீரின் கேப்டன்சியில் 2012 மற்றும் 2014 ஆகிய 2 சீசன்களிலும் கோப்பையை வென்ற வெற்றிகரமான அணி கேகேஆர். கம்பீர் கேகேஆர் அணியிலிருந்துவிலகியபின், 5 சீசன்களாக கேகேஆர் அணி பெரிதாக சோபிக்கவில்லை. 

2022ம் ஆண்டு ஐபிஎல்லில் ஷ்ரேயாஸ் ஐயர் கேகேஆர் அணியின் கேப்டன்சியை ஏற்றார். இந்த சீசனிலும் ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சியில் அசத்தலாக ஆடி கோப்பையை வெல்லும் முனைப்பில் இருந்தது கேகேஆர் அணி. இந்நிலையில், அடுத்தடுத்து அந்த அணி வீரர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகுவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

IND vs AUS: இந்திய அணியின் தோல்விக்கு இவங்கதான் காரணம்..! கேப்டன் ரோஹித் சர்மா பகிரங்க குற்றச்சாட்டு

கேகேஆர் அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது முதுகில் காயமடைந்ததால் அவர் ஒருநாள் தொடரில் ஆடவில்லை. இந்நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால் அவர் ஐபிஎல் முழு சீசனிலிருந்தும் விலகுகிறார். அதன்பின்னர் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் அவர் இந்திய அணிக்காக ஆடமாட்டார் என்று தெரிகிறது.

வங்கதேச வீரர்கள் ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் ஆகியோரும், அவர்களும் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடுகின்றனர். இந்நிலையில், கேகேஆர் அணியில் இடம்பெற்றுள்ள அந்த அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலரான நியூசிலாந்தை சேர்ந்த லாக்கி ஃபெர்குசனும் ஐபிஎல்லில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.

ஃபின் ஆலன், க்ளென் ஃபிலிப்ஸ் ஆகியோருடன் சேர்ந்து ஃபெர்குசனும் வரும் 26ம் தேதி இந்தியாவிற்கு வருவதாக இருந்தது. ஆனால் காயம் காரணமாக ஃபெர்குசன் இந்தியாவிற்கு வரவில்லை. 150 கிமீ வேகத்தில் வீசக்கூடிய மிரட்டல் ஃபாஸ்ட் பவுலரும் கேகேஆர் அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவருமான லாக்கி ஃபெர்குசனும் ஐபிஎல்லில் ஆடாதது கேகேஆர் அணி பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

விராட் கோலியே நேரில் வந்து கேட்டுகிட்டதால் தான் விண்ணப்பித்தேன்! ஆனால்..கோச் பதவி குறித்து மௌனம் கலைத்த சேவாக்

கேகேஆர் அணி:

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாகூர், லாக்கி ஃபெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சௌதி, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, அனுகுல் ராய், ரிங்கு சிங், நாராயண் ஜெகதீசன், வைபவ் அரோரா, சுயாஷ் ஷர்மா, டேவிட் வீஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, மந்தீப் சிங், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன்.
 

click me!