குடும்பம் குட்டினு ஓடாம ஒழுங்கா எல்லா மேட்ச்சிலும் ஆடுப்பா நீ..! ரோஹித் சர்மா மீது கவாஸ்கர் காட்டம்

By karthikeyan V  |  First Published Mar 23, 2023, 3:04 PM IST

உலக கோப்பை நெருங்கும் நிலையில், இந்திய அணி கேப்டன் குடும்ப விவகாரங்களுக்காக விடுப்பு எடுத்துக்கொண்டு செல்லாமல் அனைத்து போட்டிகளிலும் கண்டிப்பாக ஆடியாக வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
 


ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடப்பதால் அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் தொடரில் தோற்று பின்னடைவை சந்தித்தது.

2019ம் ஆண்டுக்கு பின் 4  ஆண்டுகள் கழித்து இந்திய அணி சொந்த மண்ணில் ஒருநாள் தொடரில் தோற்றுள்ளது. ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய மண்ணில் ஆடிய 15 தொடர்களில் 14 தொடர்களை வென்ற இந்திய அணி, முதல் முறையாக ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. 

Tap to resize

Latest Videos

IND vs AUS: இந்திய அணியின் தோல்விக்கு இவங்கதான் காரணம்..! கேப்டன் ரோஹித் சர்மா பகிரங்க குற்றச்சாட்டு

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடர் 1-1 என சமனில் இருந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி தொடரை இழந்தது.

இந்த தொடரின் முதல் போட்டியில் மைத்துணன் திருமணத்தில் கலந்துகொள்வதற்கு சென்றுவிட்டதால் ரோஹித் சர்மா ஆடவில்லை. முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் ஆடிய இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், அதற்கடுத்த 2 போட்டிகளிலும் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் ஆடி தோல்வியை தழுவியது. 

இந்த கேப்டன்சி மாற்றத்தை விரும்பாத கவாஸ்கர், உலக கோப்பை நெருங்கும் நிலையில் கேப்டன் என்ற முறையில் ரோஹித் சர்மா அனைத்து போட்டிகளிலும் ஆடியாக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

விராட் கோலியே நேரில் வந்து கேட்டுகிட்டதால் தான் விண்ணப்பித்தேன்! ஆனால்..கோச் பதவி குறித்து மௌனம் கலைத்த சேவாக்

இதுகுறித்து பேசிய கவாஸ்கர், ரோஹித் சர்மா அனைத்து போட்டிகளிலும் ஆடவேண்டும். ஒரு போட்டிக்கு மட்டும் வேறு கேப்டனை நியமிப்பதெல்லாம் வேலைக்கே ஆகாது. அணி வீரர்களில் யாரேனும் ஒருவருக்கு மாற்றாக வேறு வீரரை இறக்கலாம். ஆனால் கேப்டன் குடும்ப விஷயம் என்று ஒரு போட்டியில் ஆடாமல் இருப்பது சரியல்ல. குடும்ப விஷயம் முக்கியம் தான். அதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் உலக கோப்பை நெருங்கும் நிலையில், அணி கேப்டன் அனைத்து போட்டிகளிலும் ஆடுவதுதான் அணிக்கு நல்லது. கேப்டன் மாறிக்கொண்டே இருக்கக்கூடாது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!