நீ ஐபிஎல்லில் ஆடுவதை அனுமதிக்க முடியாது..! பேர்ஸ்டோவிற்கு கடிவாளம் போட்ட ECB.. பரிதாப பஞ்சாப் கிங்ஸ்

By karthikeyan VFirst Published Mar 23, 2023, 3:49 PM IST
Highlights

ஐபிஎல்லில் ஆட ஜானி பேர்ஸ்டோவிற்கு தடையில்லா சான்று வழங்க மறுத்துவிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். அதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி விழி பிதுங்கிப்போயுள்ளது.
 

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றிராத அணிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்கி ஏமாற்றத்துடன் தொடரைவிட்டு வெளியேறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது.

இந்த சீசனிலாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, ஷிகர் தவான் கேப்டன்சியில் உள்நாட்டு மற்றும் இங்கிலாந்து வீரர்களை கொண்ட வலுவான அணியை கட்டமைத்தது. 

டி20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி வெல்ல காரணமாக இருந்து தொடர் நாயகன் விருதை வென்ற சாம் கரனை உச்சபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுத்தது. இங்கிலாந்து அதிரடி வீரர்கள் லியாம் லிவிங்ஸ்டோன்(ரூ.11.50 கோடி) மற்றும் ஜானி பேர்ஸ்டோ(ரூ.6.75 கோடி) ஆகியோரையும் அணியில் எடுத்திருந்தது. 

IND vs AUS: இந்திய அணியின் தோல்விக்கு இவங்கதான் காரணம்..! கேப்டன் ரோஹித் சர்மா பகிரங்க குற்றச்சாட்டு

ஷிகர் தவானுடன் இங்கிலாந்து அதிரடி வீரரான ஜானி பேர்ஸ்டோவை ஓபனிங்கில் இறக்கி அதிரடியான தொடக்கத்தை பெற்று, அதன்பின்னர் லிவின்ஸ்டோன், ராஜபக்சா, ஷாருக்கான் என அதிரடியான பேட்டிங் ஆர்டரை கட்டமைத்த மகிழ்ச்சியில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, இடியாய் இறங்கியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முடிவு.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஜானி பேர்ஸ்டோ, ஓய்வில் இருந்துவந்த நிலையில், கூடிய விரைவில் ஓடுமளவிற்கு ஃபிட்னெஸை பெறவுள்ளார்.  இந்த ஆண்டு நடக்கும் ஒருநாள் உலக கோப்பை, ஆஷஸ் தொடர் ஆகியவற்றில் இங்கிலாந்து அணிக்காக ஜானி பேர்ஸ்டோ ஆடுவது அவசியம். அதனால் அவரது ஃபிட்னெஸை கருத்தில்கொண்டு ஐபிஎல்லில் ஆடுவதற்கு அவருக்கு தடையில்லா சான்று வழங்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது.

லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன் ஆகியோர் ஐபிஎல்லில் ஆடுவார்கள். ஆனாலும் டாப் ஆர்டர்  அதிரடி பேட்ஸ்மேனான ஜானி பேர்ஸ்டோவை பஞ்சாப் அணி நம்பியிருந்த நிலையில், அவர் ஆடாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலியே நேரில் வந்து கேட்டுகிட்டதால் தான் விண்ணப்பித்தேன்! ஆனால்..கோச் பதவி குறித்து மௌனம் கலைத்த சேவாக்

பஞ்சாப் கிங்ஸ் அணி:

ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், பானுகா ராஜபக்சா, அதர்வா டைட், ஹர்ப்ரீத் சிங், ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், சாம் கரன், அர்ஷ்தீப் சிங், பல்தேஜ் சிங், ககிசோ ரபாடா, நேதன் எல்லிஸ், ராகுல் சாஹர், வித்வாத் காவேரப்பா, ராஜ் பவா, ரிஷி தவான், மோஹித் ரதீ, ஷிவம் சிங், சிக்கந்தர் ராஸா,  ஜித்தேஷ் சர்மா, பிரப்சிம்ரான் சிங், ஜானி பேர்ஸ்டோ(தடையில்லா சான்று கிடைக்காததால் இந்த சீசனில் ஆடவில்லை).
 

click me!