கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஃபீல்டர்களாக வலம் வந்த வீரர்களின் பட்டியலில் சுரேஷ் ரெய்னா, ரவீந்திரா ஜடேஜா ஆகியோர் உள்ளிட்ட பலரும் இடம் பெற்றுள்ளனர்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்று. முதல் முதலாக இங்கிலாந்தில் தான் கிரிக்கெட் விளையாடப்பட்டது. அதுவும் 16ஆவது நூற்றாண்டு காலத்தில் விளையாடப்பட்டது. இந்தியாவில் 1721ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி விளையாடப்பட்டது. கடந்த 1974 ஆம் ஆண்டு தான் முதல் முதலாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டது.
அன்று முதல் கிரிக்கெட்டில் ஏராளமான மாற்றங்களுடன் ஒவ்வொரு நாளும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கிரிக்கெட்டில் மிகச்சிந்ந்த ஃபீல்டர்களாக கருதப்படும் வீரர்கள் யார் யார் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க.
முதல் போட்டியிலேயே வெற்றி வாகை சூடிய டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்: ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஜான்டி ரோட்ஸ்:
தென் ஆப்பிரிக்கா வீரர் ஜான்டி ரோட்ஸ். கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரையில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 52 டெஸ்ட் மற்றும் 245 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மிகச்சிறந்த பீல்டர்கள் யார் என்று கேட்டால் முதலில் நினைவிற்கு வருவது ஜான்டி ரோட்ஸ் தான். இதற்காகவே தென் ஆப்பிரிக்கா அணியின் பீல்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
80 பந்துகளுக்கு பிறகு முதல் பவுண்டரி அடித்து கொண்டாடிய விராட் கோலி; வைரலாகும் வீடியோ!
ரவீந்திர ஜடேஜா:
பேட்ஸ்மேன், பவுலர் மட்டுமின்றி சிறந்த பீல்டரும் கூட. இவருக்கு கைக்கு பந்து சென்றுவிட்டால் ரன் அவுட் வாய்ப்பு மிஸ்ஸே ஆகாது. அந்தளவிற்கு குறி வைப்பதில் கெட்டிக்காரர். எப்போதும் மைதானத்தில் ஆக்டிவாகவே இருப்பார். உலகத்தில் சிறந்த பீல்டர்களில் ஒருவராக ரவீந்திர ஜடேஜாவும் கருதப்படுகிறார்.
ஏபி டிவிலியர்ஸ்:
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் சிறந்த பேட்ஸ்மேன் ஏபி டிவிலியர்ஸ். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடியுள்ளார். இது தவிர ஐபிஎல் தொடர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று விளையாடியிருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஃபாப் டூப் ப்ளெசிஸ்:
தென் ஆப்பிரிக்கா அணியின் சிறந்த விளையாட்டு வீர்ரகளில் ஃபாப் டூப் ப்ளெசிஸ்ஸும் ஒருவர். இவர், 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடர்களில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த ஃபாப் டூப் ப்ளெசிஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.
ஹெர்ஷல் கிப்ஸ்:
தென் ஆப்பிரிக்கா வீரர் ஹெர்ஷல் கிப்ஸ். இவர், 1996 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இவர், மைதானத்தில் ஒரு பீல்டராக வந்து விட்டால் கண்டிப்பாக எதிரணிக்கு ஆபத்து தான்.
சுரேஷ் ரெய்னா:
இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமின்றி சிறந்த பீல்டரும் கூட. ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகப்படியான கேட்சுகள் பிடித்தவர்களின் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார்.
அஜின்க்யா ரஹானே:
இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான அஜின்க்யா ரஹானே சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமின்றி சிறந்த பீல்டரும் கூட. டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாகவும் வலம் வந்துள்ளார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணியின் துணை கேப்டனாகவும் உள்ளார்.