80 பந்துகளுக்கு பிறகு முதல் பவுண்டரி அடித்து கொண்டாடிய விராட் கோலி; வைரலாகும் வீடியோ!

By Rsiva kumar  |  First Published Jul 14, 2023, 11:14 AM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 80 பந்துகளுக்குப் பிறகு முதல் பவுண்டரி அடித்ததை கொண்டாடியுள்ளார்.


இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள ரோசோ மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், இந்தியா தனது முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில், முதல் நாள் முடிவில் 80 ரன்கள் எடுத்தது.

அதிக சதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா!

Tap to resize

Latest Videos

பின்னர் இந்தியா தனது 2ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கியது. இதில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா தனது 10ஆவது டெஸ்ட் கிரிக்கெட் சதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழந்தார். அதுமட்டுமின்றி வெளிநாட்டு மண்ணில் 2ஆவது சதமும் அடித்தார். ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 229 ரன்கள் குவித்தனர். இதில், ரோகித் சர்மா 103 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

பின்னர் வந்த சுப்மன் கில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.  அதன் பிறகு விராட் கோலி களமிறங்கினார். இது அவரது 110 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும். இந்தப் போட்டியில், அவர் 11 ரன்கள் எடுத்திருந்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 8500 ரன்களை கடந்த 5ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்.. பதக்கங்களை அடுக்கும் இந்தியா - 3 தங்கம், 3 வெண்கலத்துடன் தொடர் முன்னேற்றம்!

 

Most runs for India in Test cricket:

1) Sachin - 15921
2) Dravid - 13265
3) Gavaskar - 10122
4) Laxman - 8781
5) Kohli - 8503*

Virat Kohli in Top 5, King of world cricket. pic.twitter.com/sBBC3Lwi9P

— Johns. (@CricCrazyJohns)

 

இதே போன்று ராகுல் டிராவிட் 13,265 ரன்களும், சுனில் கவாஸ்கர் 10,122 ரன்களும், விவிஎஸ் லட்சுமணன் 8781 ரன்களும், விராட் கோலி 8503* ரன்களும் எடுத்துள்ளார். தற்போது வரையில் விராட் கோலி 8525 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறார். இந்தப் போட்டியில் 80 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த போது 81ஆவது பந்தில் இந்தப் போட்டியில் தனது முதல் பவுண்டரியை விளாசினார். அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அரைசதம் மற்றும் சதம் அடித்த சந்தோஷத்தைப் போன்று தனது முதல் பவுண்டரியை கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Virat Kohli celebrating his first boundary of the innings.

What a fantastic character.pic.twitter.com/f0DLJ8No4f

— Johns. (@CricCrazyJohns)

 

click me!