100வது சர்வதேச டெஸ்ட்டில் சதமடித்த 10 வீரர்கள்

By karthikeyan VFirst Published Dec 27, 2022, 9:28 PM IST
Highlights

தனது 100வது டெஸ்ட்டில் டேவிட் வார்னர் சதமடித்த (இரட்டை சதம்) நிலையில், 100வது டெஸ்ட்டில் சதமடித்த 10 வீரர்களை பார்ப்போம்.
 

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகித்துவரும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடந்துவருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங்  ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி சார்பில் கேமரூன் க்ரீன் அதிகபட்சமாக 5 விக்கெட் வீழ்த்தினார். மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட் வீழ்த்தினார்.

கோலியை அதிகமுறை வீழ்த்திய பவுலர்; ஐபிஎல்லில் அபாரமான சாதனைகளுக்கு சொந்தக்கார பவுலர்! ஏலத்தில் விலைபோகாத கொடுமை

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா(1), மார்னஸ் லபுஷேன்(14) ஆகியோர் ஏமாற்றமளிக்க, தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஒருமுனையில் நிலைத்து ஆடினார். வார்னருடன் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார்.

தனது 100வது டெஸ்ட்டில் அபாரமாக பேட்டிங் ஆடிய டேவிட் வார்னர் இரட்டை சதமடித்து சாதனை படைத்தார். வார்னரும் ஸ்மித்தும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 239 ரன்களை குவித்தனர். ஸ்மித் 86 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். கேமரூன் க்ரீன் 6 ரன்களுக்கு ரிட்டயர் ஆக, வார்னர் 200 ரன்களுக்கு ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். 2ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்களை குவித்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அந்த வீரர் கண்டிப்பாக முச்சதம் அடிப்பார்..! சுனில் கவாஸ்கர் நம்பிக்கை

டேவிட் வார்னர் 100வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த நிலையில், தங்களது 100வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த 10 வீரர்கள் பட்டியலை பார்ப்போம்.

காலின் காட்ரே (இங்கிலாந்து) - 1968 - எதிரணி ஆஸ்திரேலியா

ஜாவேத் மியான்தத் (பாகிஸ்தான்) - 1989 - எதிரணி இந்தியா

கார்டான் க்ரீனிட்ஜ்(வெஸ்ட் இண்டீஸ்) - 1990 - எதிரணி இங்கிலாந்து

அலெக் ஸ்டீவர்ட் (இங்கிலாந்து) - 2000 - எதிரணி வெஸ்ட் இண்டீஸ்

இன்சமாம் உல் ஹக் (பாகிஸ்தான்) - 2005 - எதிரணி இந்தியா

ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 2006 - எதிரணி தென்னாப்பிரிக்கா

கிரேம் ஸ்மித்(தென்னாப்பிரிக்கா) - 2012 - எதிரணி இங்கிலாந்து

ஹாஷிம் ஆம்லா (தென்னாப்பிரிக்கா) - 2017 - எதிரணி இலங்கை

ஜோ ரூட் (இங்கிலாந்து) - 2021 - எதிரணி இந்தியா

டேவிட் வார்னர்(ஆஸ்திரேலியா) - 2022 - எதிரணி தென்னாப்பிரிக்கா
 

click me!