இரட்டை சதத்தை ஆக்ரோஷமா கொண்டாடி காலை உடைத்துக்கொண்டு களத்தை விட்டு வெளியேறிய வார்னர்..! வைரல் வீடியோ

By karthikeyan VFirst Published Dec 27, 2022, 8:24 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் டேவிட் வார்னர் அடித்த இரட்டை சதத்தை மிகவும் ஆக்ரோஷமாக கொண்டாட அவரது காலில் காயம் ஏற்பட்டது. அதனால் தொடர்ந்து ஆடமுடியாமல் களத்தை விட்டு வெளியேறினார் வார்னர். அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
 

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகித்துவரும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடந்துவருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங்  ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி சார்பில் கேமரூன் க்ரீன் அதிகபட்சமாக 5 விக்கெட் வீழ்த்தினார். மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட் வீழ்த்தினார்.

கோலியை அதிகமுறை வீழ்த்திய பவுலர்; ஐபிஎல்லில் அபாரமான சாதனைகளுக்கு சொந்தக்கார பவுலர்! ஏலத்தில் விலைபோகாத கொடுமை

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா(1), மார்னஸ் லபுஷேன்(14) ஆகியோர் ஏமாற்றமளிக்க, தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஒருமுனையில் நிலைத்து ஆடினார். வார்னருடன் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார்.

தனது 100வது டெஸ்ட்டில் அபாரமாக பேட்டிங் ஆடிய டேவிட் வார்னர் இரட்டை சதமடித்து சாதனை படைத்தார். வார்னரும் ஸ்மித்தும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 239 ரன்களை குவித்தனர். ஸ்மித் 86 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். கேமரூன் க்ரீன் 6 ரன்களுக்கு ரிட்டயர் ஆக, வார்னர் 200 ரன்களுக்கு ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். 2ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்களை குவித்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அந்த வீரர் கண்டிப்பாக முச்சதம் அடிப்பார்..! சுனில் கவாஸ்கர் நம்பிக்கை

100வது டெஸ்ட்டில் இரட்டை சதமடித்த மகிழ்ச்சியை தனது வழக்கமான பாணியில் ஆக்ரோஷமாக குதித்து கொண்டாடினார் வார்னர். அப்போது, குதித்து தரையில் லேண்ட் ஆகும்போது கால் பிசகியதால் காலில் காயம் ஏற்பட்டது. அதனால் அவரால் தொடர்ந்து ஆட முடியவில்லை. இரட்டை சதத்தை கொண்டாடும்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக களத்தைவிட்டு வெளியேறினார் வார்னர். அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
 

A double century for David Warner!

But his jump comes at a cost! 😬 | pic.twitter.com/RqJLcQpWHa

— cricket.com.au (@cricketcomau)
click me!