ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியை பார்க்க வந்த ரஜினிகாந்தை, குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை 2-1 என்று கைப்பற்றிய நிலையில், தற்போது இந்தியா 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியைக் காண தனது மனைவி லதாவுடன் மும்பை வான்கடே மைதானத்திற்கு ரஜினிகாந்த் வந்திருந்தார். ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளித்த மும்பை கிரிக்கெட் அசோசியேசன் தலைவர் அமோல் கலே, அவருடன் சேர்ந்து போட்டியையும் கண்டுகளித்தார்.
காலில் அறுவை சிகிச்சை செய்தும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிரட்டி ரவீந்திர ஜடேஜா படைத்த சாதனைகள்!
ரஜினிகாந்த் வான்கடே மைதானத்தில் அமர்ந்து கிரிக்கெட்டை கண்டுகளிக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இதற்கு முன் கடந்த 2011-ம் ஆண்டு இந்தியா உலக கோப்பை ஜெயித்தபோது மும்பை வான்கடே ஸ்டேடியம் வந்த ரஜினி இதையடுத்து 12 ஆண்டுகளுக்கு பின் தான் அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஒரு நாள் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 188 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 5 விக்கெட் இழந்து தடுமாறியது. இதன் பிறகு கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியாக இந்தியா 39.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், கேஎல் ராகுல் 75 ரன்களும், ஜடேஜா 45 ரன்களும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
159 ஆஸ்திரேலியாவுல, 188 இந்தியாவுல - இரண்டிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
இந்த நிலையில், கிரிக்கெட் போட்டியைக் காண வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இந்திய கிரிக்கெட் வீரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். என்ன பேசினார்கள் என்பது குறித்து தகவல் ஏதும், வெளிவரவில்லை. எது பேசியிருந்தாலும் நல்ல தகவலை தான் பரிமாறியிருப்பார்கள் என்று தெரிகிறது. ரஜினியுடன் போட்டோ எடுத்துக் கொண்ட இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர் என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.