ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்தியா வந்த ஆஸ்திரேலியா முதலில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி கொண்ட தொடரில் பங்கேற்றது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வந்த ரவீந்திர ஜடேஜா ரஞ்சி டிராபி தொடர் மூலமாக இந்திய அணிக்கு மீண்டும் திரும்பினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளும், 70 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டும் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இதே போன்று 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டும், 26 ரன்களும், 2 ஆவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டும் கைப்பற்றி 2ஆவது போட்டியிலும் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதையடுத்து நடந்த 3ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் கைப்பற்றினார். கடைசியாக நடந்த 4ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கைப்பற்றினார். இறுதியாக தொடர் நாயகன் விருது பெற்றார். இறுதியாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டி ரவீந்திர ஜடேஜாவுக்கு 300ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டி.
159 ஆஸ்திரேலியாவுல, 188 இந்தியாவுல - இரண்டிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் ஒரு நாள் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆஸ்திரேலியா அதிரடியாக தொடங்கியது. இதில், ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா 9 ஓவர்கள் வீசி 46 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதிரடியாக ஆடிய மிட்செல் மார்ஷ் மற்றும் மேஸ்வெல் விக்கெட்டை கைப்பற்றினார். அதோடு, லபுஷேன் கொடுத்த கடினாமாக கேட்சையும் டைவ் அடித்து பிடித்து அசத்தினார்.
கலைஞர் எம் கருணாநிதி ஸ்டாண்டுகளை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பின்னர், 189 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். தொடக்க வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர். இறுதியாக கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி வெற்றி பெறச் செய்தனர். இறுதியாக இந்தியா 39.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், கேஎல் ராகுல் 75 ரன்களும், ஜடேஜா 45 ரன்களும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இப்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே ரவீந்திர ஜடேஜே பல அற்புதமான சாதனைகளை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அனைத்து ஃபார்மேட் போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது பெற்று அசத்தியுள்ளார். இதே போன்று விராட் கோலியும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அனைத்து ஃபார்மேட் போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நாளை விசாகப்பட்டினம் மைதானத்தில் நடக்கிறது.
முதல் டெஸ்ட் - ஆட்டநாயகன்
2ஆவது டெஸ்ட் - ஆட்டநாயகன்
4 டெஸ்ட் முடிவு - தொடர் நாயகன்
முதல் ஒரு நாள் போட்டி - ஆட்டநாயகன்