BAN vs IND: கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்ப்பு.. கேஎல் ராகுல் கேப்டன்

Published : Dec 09, 2022, 04:55 PM IST
BAN vs IND: கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்ப்பு.. கேஎல் ராகுல் கேப்டன்

சுருக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா, தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகிய 3 வீரர்களும் காயத்தால் விலகிய நிலையில், குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  

இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று வங்கதேச அணி ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி நாளை நடக்கிறது.

காயம் காரணமாக கடைசி ஒருநாள் போட்டியிலிருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகிய 3 வீரர்களும் விலகினர். ரோஹித்துக்கு 2வது போட்டியின்போது கை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. 3 வீரர்கள் ஒருநாள் அணியிலிருந்து விலகிய நிலையில், இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் சைனாமேன் பவுலர் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு

கடைசி போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கேஎல் ராகுல் ஆடாததால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் கேப்டனாக செயல்பட்டார். இந்த தொடரில் ராகுல் ஆடுவதால் அவர் கேப்டனாக செயல்படவுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் ODI போட்டியை போல பேட்டிங் ஆடிய இங்கி.,! அறிமுக டெஸ்ட்டில் 7 விக்கெட் வீழ்த்திய அப்ரார் அகமது

கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:

 ஷிகர் தவான், இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், முகமது சிரஜ், உம்ரான் மாலிக், ஷபாஸ் அகமது, ராகுல் திரிபாதி, ரஜத் பட்டிதர், குல்தீப் யாதவ்.

BAN vs IND: 3 வீரர்கள் விலகல்.. 3வது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!