கயாக், பெயிண்ட்பால் என்று ஜாலியா இருக்கும் கேஎல் ராகுல்: வைரலாகும் வீடியோ!

By Rsiva kumar  |  First Published Jul 31, 2023, 5:27 PM IST

தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்த கேஎல் ராகுல் தற்போது ஜாலியா ஒரு டிரிப் சென்றுள்ளார்.


ஐபிஎல் தொடரின் போது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனான கேஎல் ராகுலுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து காலில் அறுவை செய்து கொண்டார். அதன் பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை மேற்கொண்டு வந்தார். தற்போது உடல் தகுதியுடன் இருக்கும் கேஎல் ராகுல் வார விடுமுறை தனது நண்பர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.

சீட் பெல்ட் அணிந்து 1973 ஆம் ஆண்டுகளில் வந்த காரை ஓட்டிச் சென்ற தோனி: வைரலாகும் வீடியோ!

Tap to resize

Latest Videos

ஆம், அவர் கயாக்கிங் மற்றும் பெயிண்ட்பால் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடர்ந்து இந்திய அணி அயர்லாந்து சென்று 3டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையில் நடக்கிறது. அயர்லாந்துக்கு எதிரானட் டி20 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

ஐபிஎல் 2024 தொடருக்கு தயாராகி வரும் எம்.எஸ்.தோனி: ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி!

ஜஸ்ப்ரித் பும்ரா, கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது உடல் தகுதியின் அடிப்படையில் இந்திய அணி அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பும்ரா, உடல் தகுதியுடன் இருப்பதால், அவர் அயர்லாந்து தொடரில் பங்கேற்கலாம் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியிருந்தார்.

ராஞ்சியில் விண்டேஜ் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வேகமாக செல்லும் எம்எஸ் தோனி: வைரலாகும் வீடியோ!

இதே போன்று கேஎல் ராகுலும் 100 சதவிகித உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும் அயர்லாந்து தொடருக்கு இன்னும் 18 நாட்கள் உள்ள நிலையில், தேர்வுக்குழுவும், பிசிசிஐ மருத்துவக் குழுவும் அவர் அயர்லாந்து தொடருக்கு திரும்புவது குறித்து நம்பிக்கையுடன் உள்ளனர்.

விமானத்தில் தூங்கியபடி வரும் தோனியை வீடியோ எடுத்த விமான பணிப்பெண்: வைரலாகும் வீடியோ!

அயர்லாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்படுவதில் ஏன் இவ்வளவு காலதாமதம் என்று கேட்டால் கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரது மருத்துவ அறிக்கைக்காக தேர்வுக்குழு காத்துக் கொண்டிருக்கிறது. இந்த மூவரும் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான வீரர்கள். அடுத்து ஆசிய கோப்பை 2023 மற்றும் உலகக் கோப்பை 2023 நடக்க உள்ள நிலையில், அயர்லாந்துக்கு எதிரான தொடரும், ஆசிய கோப்பை தொடரும் அவர்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக அமையும்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KL Rahul👑 (@klrahul)

 

கேஎல் ராகுல் தவிர ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், வார விடுமுறை நாட்கள் என்பதால், கேஎல் ராகுல் தனது நண்பர்களுடன் இணைந்து ஜாலியாக அவுட்டிங் சென்றுள்ளார். அங்கு படகு சவாரி, வில் அம்பு, கயாக்கிங், பெயிண்ட்பால் என்று அசத்துகிறார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

click me!