கேஎல் ராகுலுக்குப் பதிலாக சுப்மன் கில் எடுத்திருக்கலாமா? 22, 23, 10, 2, 20 என்று தொடர்ந்து சொதப்பல்!

By Rsiva kumarFirst Published Feb 10, 2023, 12:36 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று நாக்பூரில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் ஆடியது. அதன்படி அந்த அணியில் லபுசேஞ்ச் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ஆஸ்திரேலியா 177 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சதத்தை நோக்கி ரோகித் சர்மா - இந்தியா 151 ரன்கள் சேர்ப்பு!

இதையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரும் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். கடந்த சில ஆண்டுகளாக சொதப்பி வந்த கேஎல் ராகுல் இந்த டெஸ்டிலும் சொதப்பினார். அவர், 71 பந்துகளில் ஒரு பவுண்டரி உள்பட 20 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக கடந்த 10 இன்னிங்ஸிலும் சொதப்பி வந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

புதிய சர்ச்சையில் ரவீந்திர ஜடேஜா: தெள்ளத் தெளிவாக விளக்கம் கொடுத்த போட்டி நடுவர்!

இதற்கு முன்னதாக வங்கதேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கேஎல் ராகுல் 22, 23, 10 மற்றும் 2 ரன்கள் என்று எடுத்துள்ளார். கடந்த 10 போட்டிகளில் முறையே 23, 50, 8, 12, 10, 22, 23, 10, 2 என்று ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் முறையே, 39, 64, 7 என்று ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், இவருக்குப் பதிலாக டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில்லிற்கு அணியில் வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: சாதனை பட்டியலில் 2ஆவது இடம் பிடித்த ரோகித் சர்மா!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக நாக்பூரில் உள்ள ஸ்ரீ சாய் பாபா  கோயிலுக்கு சென்றிந்த கேஎல் ராகுல் சதம் அடிக்க வேண்டும், இந்தியா ஜெயிக்க வேண்டும் என்றூ சாமி தரிசனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!