SA20: மார்க்ரம் அபார சதம்.. அரையிறுதியில் ஜேஎஸ்கே அணியை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப்

By karthikeyan VFirst Published Feb 10, 2023, 8:15 AM IST
Highlights

தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரின் அரையிறுதியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
 

தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. பிரிட்டோரியா கேபிடள்ஸ், பார்ல் ராயல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. 

முதல் அரையிறுதி போட்டியில் பார்ல் ராயல்ஸை வீழ்த்தி பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறிவிட்ட நிலையில், 2வது அரையிறுதி போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் மோதின. 

IND vs AUS: ரோஹித் சர்மா அதிரடி அரைசதம்.. இந்திய அணிக்கு நல்ல தொடக்கம்

செஞ்சூரியனில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஸிங்டன் (6) மற்றும் டெம்பா பவுமா(0) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். 

அதன்பின்னர் 3வது விக்கெட்டுக்கு மார்க்ரமும் ஹெர்மானும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி 99 ரன்களை குவித்தனர். ஹெர்மான் 48 ரன்களில் ஆட்டமிழக்க, அபாரமாக பேட்டிங் ஆடிய மார்க்ரம் சதமடித்தார். 58 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 100 ரன்களை குவித்தார் மார்க்ரம். அவரது அபாரமான சதத்தால் 20 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 213 ரன்களை குவித்தது.

214 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் டுப்ளெசிஸ்(0), ப்ளூய்(0) ஆகிய இருவரும் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். கோயட்ஸீ 12 ரன்கள் மட்டுமே அடித்தார். அதிரடியாக ஆடிய ரீஸா ஹென்ரிக்ஸ் 96 ரன்கள் அடித்து 4 ரன்னில் சதத்தை தவறவிட்டார். 54 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 96 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். பின்வரிசையில் ரொமாரியோ ஷெஃபெர்ட் 14 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் அடித்து வெற்றிக்காக கடுமையாக போராடினார். ஆனாலும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

IND vs AUS: டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம்.. முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்த சூர்யகுமார் யாதவ்

14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது. பிரிட்டோரியா கேபிடள்ஸ் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி வரும் 11ம் தேதி ஜோஹன்னஸ்பர்க்கில் நடக்கிறது.
 

click me!