ரஞ்சி டிராபி: அரையிறுதியில் மயன்க் அகர்வால் அபார இரட்டை சதம்..! சௌராஷ்டிராவிற்கு எதிராக கர்நாடகா பெரிய ஸ்கோர்

By karthikeyan V  |  First Published Feb 9, 2023, 4:24 PM IST

ரஞ்சி டிராபி அரையிறுதியில் சௌராஷ்டிராவிற்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடகா அணி, மயன்க் அகர்வாலின் அபாரமான இரட்டை சதத்தால் முதல் இன்னிங்ஸில் 407 ரன்களை குவித்தது.
 


ரஞ்சி தொடர் இறுதிகட்டத்தை நெருங்குகிறது. சௌராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. கர்நாடகா - சௌராஷ்டிரா அணிகளும், ஆந்திரா - மத்திய பிரதேசம் அணிகளும் அரையிறுதியில் ஆடிவருகின்றன.

கர்நாடகா - சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

Tap to resize

Latest Videos

ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்.. ஜடேஜா, அஷ்வின் சுழலில் சுருண்டது ஆஸி.,! வெறும் 177 ரன்களுக்கு ஆல் அவுட்

சௌராஷ்டிரா அணி:

அர்பிட் வசவடா (கேப்டன்), சேத்தன் சக்காரியா, சிராக் ஜானி, தர்மேந்திரசின்ஹா ஜடேஜா, ஹர்விக் தேசாய் (விக்கெட் கீப்பர்), குஷாங் படேல், பார்த் பட், ப்ரெராக் மன்கத், ஷெல்டான் ஜாக்சன், ஸ்னெல் படேல், விஷ்வராஜ் ஜடேஜா.

கர்நாடகா அணி:

தேவ்தத் படிக்கல், கிருஷ்ணப்பா கௌதம், வாசுகி கௌஷிக், மனீஷ் பாண்டே, மயன்க் அகர்வால் (கேப்டன்), நிகின் ஜோஸ், ஸ்ரீநிவாஸ் ஷரத் (விக்கெட் கீப்பர்), ரவிகுமார் சமர்த், ஷ்ரேயாஸ் கோபால், விஜய்குமார் வைஷாக், வித்வாத் காவெரப்பா.

முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடகா அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான மயன்க் அகர்வால் ஒருமுனையில்  நிலைத்து நின்று அபாரமாக பேட்டிங் ஆட, மறுமுனையில் சமர்த் (3), தேவ்தத் படிக்கல்(9), நிகின் ஜோஸ்(13), மனீஷ் பாண்டே(7), ஷ்ரேயாஸ் கோபால்(15) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு மறுமுனையில் ஆட்டமிழந்தனர். 6வது விக்கெட்டுக்கு மயன்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ஷரத் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஷரத் 66 ரன்கள் அடித்தார்.

IND vs AUS: டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம்.. முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்த சூர்யகுமார் யாதவ்

அபாரமாக பேட்டிங் ஆடிய மயன்க் அகர்வால் இரட்டை சதமடித்தார். 429 பந்துகளை எதிர்கொண்டு 28 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 249 ரன்களை குவித்த மயன்க் அகர்வால் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். மயன்க் அகர்வாலின் அபாரமான இரட்டை சதத்தால் முதல் இன்னிங்ஸில் 407 ரன்களை குவித்தது கர்நாடகா அணி. இதையடுத்து சௌராஷ்டிரா அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது.
 

click me!