ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்.. ஜடேஜா, அஷ்வின் சுழலில் சுருண்டது ஆஸி.,! வெறும் 177 ரன்களுக்கு ஆல் அவுட்

By karthikeyan V  |  First Published Feb 9, 2023, 3:14 PM IST

ரவீந்திர ஜடேஜாவின் அபாரமான சுழற்பந்துவீச்சில் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் வெறும் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலிய அணி.
 


இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்டதொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் டாட் மர்ஃபி என்ற ஸ்பின்னர் அறிமுகமானார். 

இந்திய அணி:

Tap to resize

Latest Videos

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ்.

IND vs AUS: டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம்.. முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்த சூர்யகுமார் யாதவ்

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், மேட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நேதன் லயன், டாட் மர்ஃபி, ஸ்காட் போலந்த்.

ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இன்னிங்ஸின் 2வது ஓவரில் உஸ்மான் கவாஜாவை ஒரு ரன்னுக்கு எல்பிடபிள்யூ செய்து அனுப்பினார் முகமது சிராஜ். அதற்கடுத்த ஓவரிலேயே டேவிட் வார்னரின் ஸ்டம்ப்பை கழட்டி எறிந்து ஒரு ரன்னில் வெளியேற்றினார் ஷமி.

2 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணிக்கு, அதன்பின்னர் மார்னஸ் லபுஷேனும் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொண்டு சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 3வது விக்கெட்டுக்கு 82 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடி 49 ரன்கள் அடித்த லபுஷேனை வீழ்த்திய ஜடேஜா, அதற்கடுத்த பந்திலேயே மேட் ரென்ஷாவையும் வீழ்த்தினார்.

மதிய உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் அடித்திருந்தது ஆஸ்திரேலிய அணி. உணவு இடைவேளைக்கு பின் ஜடேஜா மளமளவென ஆஸ்திரேலிய வீரர்களை வீழ்த்தினார். லபுஷேன்(49), ரென்ஷாவை(1) தொடர்ந்து ஸ்மித்தையும் 37 ரன்களுக்கு க்ளீன் போல்டாக்கி அனுப்பினார் ஜடேஜா. அதன்பின்னர் அதிரடியாக ஆடி 33 பந்தில் 36 ரன்கள் அடித்த அலெக்ஸ் கேரியை வீழ்த்திய அஷ்வின், கம்மின்ஸையும் 6 ரன்களுக்கு வீழ்த்தினார். ஹேண்ட்ஸ்கோம்ப்பை 31 ரன்களுக்கு வீழ்த்திய ஜடேஜா, டாட் மர்ஃபியை டக் அவுட்டாக்கி, 5 விக்கெட் வீழ்த்தினார். கடைசி விக்கெட்டை அஷ்வின் வீழ்த்த, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

முழு விவசாயியாகவே மாறிய தோனி.. தன் விளைநிலத்தை டிராக்டரில் தானே உழுத தோனி..! வைரல் வீடியோ

முழங்கால் அறுவை சிகிச்சையால் கடந்த பல மாதங்களாக ஆடாத ஜடேஜா, தனது கம்பேக் டெஸ்ட்டில் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது.
 

click me!