சதத்தை நோக்கி ரோகித் சர்மா - இந்தியா 151 ரன்கள் சேர்ப்பு!

By Rsiva kumarFirst Published Feb 10, 2023, 11:53 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளை வரை இந்திய அணி 151 ரன்கள் சேர்த்துள்ளது.
 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் சிக்கி 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் ஆஸ்திரேலியாவின் லபுசேஞ்ச் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

புதிய சர்ச்சையில் ரவீந்திர ஜடேஜா: தெள்ளத் தெளிவாக விளக்கம் கொடுத்த போட்டி நடுவர்!

இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கினர். ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் அடித்து 12 ரன்கள் விளாசினார். தொடர்ந்து பவுண்டரி விளாசிய ரோகித் சர்மா 66 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில், 8 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கும். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: சாதனை பட்டியலில் 2ஆவது இடம் பிடித்த ரோகித் சர்மா!

கேஎல் ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, இன்றைய ஆட்டதை தொடங்கிய இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 62 பந்துகளில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி உள்பட 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த புஜாராவும் 7 ரன்களில் வெளியேறினார். ஒருபுறம் நிதானமாக ஆடிய ரோகித் சர்மா 85 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். விராட் கோலியும் 12 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 52 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs AUS: டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம்.. முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்த சூர்யகுமார் யாதவ்

click me!