டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரிஷப் பண்ட்டை நியமிக்காமல் புஜாராவை நியமித்தது ஏன்..? கேஎல் ராகுல் விளக்கம்

By karthikeyan V  |  First Published Dec 12, 2022, 5:28 PM IST

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்படாமல் புஜாரா நியமிக்கப்பட்டது ஏன் என்று பொறுப்பு கேப்டன் கேஎல் ராகுல் விளக்கமளித்துள்ளார்.
 


இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என வங்கதேச அணி வென்றது. அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது.

வரும் 14ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள நிலையில், காயம் காரணமாக முதல் போட்டியிலிருந்து கேப்டன் ரோஹித் சர்மா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அபிமன்யூ ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

ரோஹித் சர்மா முதல் டெஸ்ட்டில் ஆடாததால் கேஎல் ராகுல் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். புஜாரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட்டை துணை கேப்டனாக நியமிக்காமல் புஜாராவை நியமித்ததை, டுவிட்டரில் ரசிகர்கள் விமர்சித்தது மட்டுமல்லாது பயங்கரமாக கிண்டலும் அடித்தனர்.

அவுட்டாகாமல் இருந்திருந்தால் முச்சதம் அடித்திருப்பேன்..! நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் - இஷான் கிஷன்

இந்நிலையில், அதுகுறித்து விளக்கமளித்த பொறுப்பு கேப்டன் கேஎல் ராகுல், எதன் அடிப்படையில் இந்த நியமனங்கள் நடக்கின்றன என்று எனக்கு தெரியாது. யாருக்கு எந்த பொறுப்பு கிடைத்தாலும், தனது முதுகில் தானே தட்டிக்கொடுத்துக்கொள்ள வேண்டியதுதான். அனைவருக்கும் அவரவர் பொறுப்பு என்னவென்று தெரியும். ரிஷப் பண்ட் மற்றும் புஜாரா ஆகிய இருவருமே சிறந்த பங்களிப்பை செய்திருக்கின்றனர். எனவே இதைப்பற்றியெல்லாம் நாங்கள் அதிகம் யோசிப்பதில்லை. ஒரு அணியாக சிறப்பாக ஆடவேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம் என்று கேஎல் ராகுல் தெரிவித்தார்.

இந்த டெஸ்ட் தொடரிலிருந்து முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகிய நிலையில், அவர்களுக்கு பதிலாக ஜெய்தேவ் உனாத்கத், நவ்தீப் சைனி மற்றும் சௌரப் குமார் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோலி 200 சதங்கள் கூட அடிக்கட்டும்.. இந்திய அணிக்கு தேவை உலக கோப்பை..! பாக்., முன்னாள் வீரர் அதிரடி

இந்திய டெஸ்ட் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், அபிமன்யூ ஈஸ்வரன், நவ்தீப் சைனி, சௌரப் குமார், ஜெய்தேவ் உனாத்கத்.
 

click me!