BAN vs IND: பாவம் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காது.. ஆஸி. தொடரில் இருக்கவேமாட்டார்- தினேஷ் கார்த்திக்

By karthikeyan VFirst Published Dec 12, 2022, 4:27 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எடுக்கப்பட்டுள்ள ஜெய்தேவ் உனாத்கத்துக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்றும், அடுத்ததாக நடக்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காது என்றும் தினேஷ் கார்த்திக் கருத்து கூறியுள்ளார்.
 

இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என வங்கதேச அணி வென்றது. அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி வரும் 14ம் தேதி தொடங்குகிறது. காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து கேப்டன் ரோஹித் சர்மா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் விலகினர். எனவே வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுட்டாகாமல் இருந்திருந்தால் முச்சதம் அடித்திருப்பேன்..! நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் - இஷான் கிஷன்

ரோஹித், ஷமி, ஜடேஜாவுக்கு பதிலாக அபிமன்யூ ஈஸ்வரன், ஜெய்தேவ் உனாத்கத், நவ்தீப் சைனி, சௌரப் குமார் ஆகிய வீரர்கள் இந்திய அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். 2010ல் தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய ஜெய்தேவ் உனாத்கத், அதன்பின்னர் 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே டிராபி ஆகிய உள்நாட்டு தொடர்களில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவாக மீண்டும் இந்திய அணியில் எடுக்கப்பட்டுள்ளார். 2019-2020 ரஞ்சி தொடரில் 67விக்கெட்டுகளை வீழ்த்தி, சௌராஷ்டிரா அணி முதல் முறையாக ரஞ்சி டிராபியை ஜெயிக்க காரணமாக இருந்தார். அண்மையில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடரிலும் அபாரமாக பந்துவீசி 10 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி சௌராஷ்டிரா அணி விஜய் ஹசாரே டிராபியை ஜெயிக்க காரணமாக இருந்தார். 

அதன்விளைவாக 12 ஆண்டுகளுக்கு பின் இந்திய டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காது என்று தினேஷ் கார்த்திக் கருத்து கூறியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்.. பென் ஸ்டோக்ஸ் அபார சாதனை

இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக்,  உண்மையை சொல்ல வேண்டுமென்றால் உனாத்கத் வங்கதேச டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட ஆடமாட்டார். உமேஷ் யாதவ், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் தான் ஃபாஸ்ட் பவுலர்களாக ஆடுவார்கள். இந்திய அணியில் இடம்பெறுவதே அவருக்கான கிரெடிட் தான். ஆனால் அவருக்கு ஆட வாய்ப்பு கிடைக்காது. பும்ரா அல்லது ஷமி வந்துவிட்டால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஜெய்தேவ் உனாத்கத்துக்கு இடம் கிடைக்காது என்றார் தினேஷ் கார்த்திக்.
 

click me!