ICC WTC புள்ளி பட்டியல்: முதலிடத்தில் நங்கூரம் போட்ட ஆஸி., இந்தியாவின் ரூட் கிளியர். படுபாதாளத்தில் பாக்.,

By karthikeyan VFirst Published Dec 12, 2022, 3:17 PM IST
Highlights

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் வலுவாக அமர்ந்துள்ளது. இங்கிலாந்திடம் 2 டெஸ்ட்டில் தோற்று தொடரை இழந்த பாகிஸ்தான் அணி 6ம் இடத்திற்கு பின் தங்கிவிட்டது.
 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலில் மோதும். டெஸ்ட் போட்டிகளில் அணிகள் பெறும் வெற்றிகளின் சதவிகிதங்கள் அடிப்படையில் அணிகள் புள்ளி பட்டியலில் வரிசைப்படுத்தப்படுகின்றன.

அந்தவகையில், அதிக வெற்றிகளை பெறும் அணிகளால் தான், புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்து ஃபைனலுக்கு முன்னேற முடியும். கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப்  ஃபைனலில் ஆடிய இந்தியாவும் நியூசிலாந்தும் இம்முறை பின் தங்கியுள்ளன. இம்முறை ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன.

அவுட்டாகாமல் இருந்திருந்தால் முச்சதம் அடித்திருப்பேன்..! நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் - இஷான் கிஷன்

வெஸ்ட் இண்டீஸை 2-0 எனஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலிய அணி 75 சதவிகித வெற்றியுடன் முதலிடத்தில் வலுவாக அமர்ந்துள்ளது. 2ம் இடத்தில் தென்னாப்பிரிக்கா இருந்தாலும், இந்திய அணிக்கும் 2ம் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே போட்டி கடுமையாக இருக்கும்.

இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் தோற்று 2-0 என சொந்த மண்ணில் தொடரை இழந்த பாகிஸ்தான் அணி, 42.42 சதவிகிதத்துடன் 6ம் இடத்திற்கு பின் தங்கிவிட்டது. புள்ளி பட்டியலில் கீழே இருந்த இங்கிலாந்து அணி தொடர் வெற்றிகளால் 44.44 சதவிகிதத்துடன் 5ம் இடத்திற்கு முன்னேறியது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்.. பென் ஸ்டோக்ஸ் அபார சாதனை

52.08 சதவிகிதத்துடன் 4ம் இடத்தில் இருக்கும் இந்திய அணி, வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஜெயித்து, அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடக்கும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் குறைந்தது 3 போட்டிகளில் ஜெயித்தால் இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.
 

click me!