டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்.. பென் ஸ்டோக்ஸ் அபார சாதனை

By karthikeyan V  |  First Published Dec 12, 2022, 2:26 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பிரண்டன் மெக்கல்லமின் சாதனையை சமன் செய்தார் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.
 


சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் முதன்மையானவர் பென் ஸ்டோக்ஸ். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்துவருபவர்.

3 ஃபார்மட்டுக்கும் ஏற்ற வீரர். டெஸ்ட்டில் ஆஷஸ் தொடரில் வெற்றி, ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை என 3 ஃபார்மட்டிலும் முக்கியமான கோப்பைகளை இங்கிலாந்துக்கு வென்று கொடுத்தவர் பென் ஸ்டோக்ஸ். 2019 ஒருநாள் உலக கோப்பை ஃபைனலில் நியூசிலாந்துக்கு எதிராக தனி வீரராக போராடி இங்கிலாந்து முதல் முறையாக ஒருநாள் உலக கோப்பையை வெல்ல காரணமாக திகழ்ந்தார். அதேபோல அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை ஃபைனலில் பாகிஸ்தானுக்கு எதிராக தனி வீரராக போராடி 52 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

Tap to resize

Latest Videos

PAK vs ENG: 2வது டெஸ்ட்டில் போராடி தோல்வி.. சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழந்தது பாகிஸ்தான்

ஒருநாள், டி20 கிரிக்கெட்டை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் தனது அல்டிமேட்டான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் பென் ஸ்டோக்ஸ். 2019 ஆஷஸ் தொடரில் ஹெடிங்லியில் நடந்த டெஸ்ட்டில் கடைசி விக்கெட்டுக்கு 76 ரன்களை குவித்து பரபரப்பான போட்டியில் இங்கிலாந்துக்கு செம த்ரில்லான வெற்றியை பெற்றுக்கொடுத்தார். தனி ஒருவனாக பென் ஸ்டோக்ஸ் ஆடிய அந்த இன்னிங்ஸை மறக்கவே முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் அதுவும் ஒன்று.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக ஜோ ரூட் கேப்டன்சியிலிருந்து விலகிய பின், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுவருகிறார்.

இப்படியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பிரண்டன் மெக்கல்லமுடன் பகிர்ந்துள்ளார்.

 பென் ஸ்டோக்ஸ் கேப்டன்சியில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி ஆடிவருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என இங்கிலாந்து அணி தொடரை வென்றுவிட்டது. முல்தானில் நடந்த 2வது டெஸ்ட் போட்டி இன்றுதான் முடிந்தது. இந்த போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வென்றது.

அவுட்டாகாமல் இருந்திருந்தால் முச்சதம் அடித்திருப்பேன்..! நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் - இஷான் கிஷன்

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸ் ஒரு சிக்ஸரும் 2வது இன்னிங்ஸில் ஒரு சிக்ஸரும் விளாசினர். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 107 சிக்ஸர்களை விளாசிய ஸ்டோக்ஸ், பிரண்டன் மெக்கல்லமுடன் (107 சிக்ஸர்கள்) முதலிடத்தை பகிர்ந்துள்ளார் பிரண்டன் மெக்கல்லம் 101 போட்டிகளில் ஆடி 107 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஆனால் ஸ்டோக்ஸ் 88 போட்டிகளில் 107 சிக்ஸர்களை விளாசியதால் ஏற்கனவே முதலிடத்தை பிடித்துவிட்டார் ஸ்டோக்ஸ். ஆனால் இன்னும் ஒரு சிக்ஸர் அடித்தால் மெக்கல்லமை 2ம் இடத்திற்கு தள்ளி முதலிடத்தில் வலுவாக பிடிப்பார். 

இந்த வரிசையில் 100 சிக்ஸர்களுடன் ஆடம் கில்கிறிஸ்ட் 3ம் இடத்தில் உள்ளார்.
 

click me!